மாதம்பட்டி ரங்கராஜனுக்கு எதிராக ஜாய் செய்த சம்பவம்! முதல்வர் முக ஸ்டாலினை டேக் செய்து வைத்த கோரிக்கை.. வெடித்த பிரச்சனை
சென்னை: பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த விவகாரம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஜாய் கிரிசில்டா அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, சமூக வலைதளத்தில் பகிரங்கமாக நீதி கேட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சை
மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம். ஜாய், ரங்கராஜன் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் வைத்த பகிரங்க வேண்டுகோள்
தற்போது ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜன் கூறிய குற்றச்சாட்டுக்கு நீதி கேட்டு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள் இதோ: "எனது பிறக்காத குழந்தைக்காக நீதி வேண்டும்" என்று கோரி பதிவிட்டுள்ளார். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன், திருமணத்தையும் கர்ப்பத்தையும் காரணம் காட்டி, எப்படி ஏமாற்றினார் என்பதை விவரித்து, 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். நான் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன். புகார் அளிப்பதற்காக நான் என்னுடைய முற்றிலும் கண் தெரியாத தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.
ரங்கராஜன் ஒரு விஐபி சிகிச்சை பெறுகிறார். அவர் எனக்கெதிராகத் தரம் தாழ்ந்த, ஆபாசமான மற்றும் உள்நோக்கம் கொண்ட சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். ஒரு விஐபி, பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் தப்பிக்க முடியுமா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இந்தப் பதிவில் அவர், தமிழ்நாடு முதல்வர், சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் சென்னை காவல்துறை ஆகியோரை டேக் செய்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications