கருவிற்கு உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கலாமா? மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி அடுத்த ஆதாரங்களை லீக் செய்த ஜாய்
சென்னை: சமையல் கலையின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்டு, நடிகராகவும், நடுவராகவும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜன். தனது எளிமையான குணத்தால், ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புயலைச் சந்தித்து வருகிறார். அவரது இரண்டாவது மனைவி ஜாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில உணர்வுபூர்வமான பதிவுகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சமையல் கலைஞரிலிருந்து திரைப்பயணம் வரை
கோயம்புத்தூரில் மாதம்பட்டி தாலி என்ற கேட்டரிங் சர்வீஸ் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மாதம்பட்டி ரங்கராஜன், விரைவில் ஒரு பிரபலமான சமையல் கலைஞராக மாறினார். பல திரைப்பட பிரபலங்களுக்குச் சமைத்ததன் மூலம், அவருக்குச் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது.
அதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டதன் மூலம், அவர் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அவரது எதார்த்தமான பேச்சும், எளிமையான குணமும், ரசிகர்களின் அன்பை அள்ளின.
வைரலான இன்ஸ்டாகிராம் பதிவுகள்
மாதம்பட்டி ரங்கராஜனின் வாழ்க்கையில், அவரது முதல் மனைவியைப் பிரிந்து, ஜாய் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்ட விஷயம் வெளியே வந்த போது அது உண்மை இருக்காது என்று முதலில் பலர் கூறி வந்தனர் ஆனால் ஜாய் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் உடன் திருமணம் நடக்கும் போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து, அதற்கு ஒரு உணர்வுபூர்வமான கேப்ஷன் கொடுத்துள்ளார்.
அதில், "கருவில் உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பி இருக்கிறாய்... இதுதானா உன் அன்பு அறிமுகம்"என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நேற்று அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக" என்று குறிப்பிட்டிருந்தார்.
சினிமா பிரபலங்களின் மௌனம்
இந்தச் சர்ச்சை, சமூக வலைத்தளங்களில் பரவி விவாதிக்கப்பட்டு வந்தாலும், மாதம்பட்டி ரங்கராஜனுடன் நெருங்கிய பழக்கம் கொண்ட எந்த சினிமா பிரபலமும் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால், இதில் தலையிட விரும்பவில்லை என்று அவர்கள் மௌனம் காப்பதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் இன்னும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரது மௌனம், ரசிகர்களின் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த உணர்வுபூர்வமான பதிவுகளுக்கு அவர் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications