மாதம்பட்டி ரங்கராஜன் அடித்ததில் காது கேட்காமல் போயிடுச்சு! மகன் முன்பு நடந்த சம்பவம்! கதறி அழுத ஜாய்
சென்னை: சமூக வலைத்தளங்களில் சமையல் கலைஞர், தொழில்முனைவோர், நடிகர் எனப் பல முகங்களைக் கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜன். ஒரு காலத்தில் யூடியூப் வீடியோக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவர், பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் துணை நடிகராக நடித்து, தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். ஆனால், சமீபத்தில் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் என்பவர் அளித்த புகார், தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜன்
கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜன், சமையல் தொழில் மூலம் பிரபலமானவர். பாரம்பரிய முறைப்படி கிராமிய சமையல்களைச் செய்யும் இவரது யூடியூப் சேனல், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார். சமையலுக்குப் பிறகு மெஹந்தி சர்க்கஸ் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
கண்கலங்கிய ஜாய் - அதிர்ச்சி அளித்த பேட்டி
மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி ஜாய், சமீபத்தில் சிவசங்கரி youtube சேனலில் ஒரு பேட்டி அளித்தார். அதில், தனது கணவர் மீது பல அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் கூறியவை:
கர்ப்பத்தை கலைக்க முயற்சி
மாதம்பட்டி ரங்கராஜன், தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த கர்ப்பம் வேண்டாம் என்று சொன்னதாகவும், இதனால் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டதாகவும் ஜாய் தெரிவித்துள்ளார். ஆனால், ஜாய் அந்த குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். ஒருநாள், மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய்யின் மகனின் முன்னிலையில், ஜாயை அடித்துள்ளார். அதில், ஜாய்க்கு காது கேட்காமல் போனதாகவும், ஒரு கண்ணின் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, கண் பார்வையும் குறைந்து விட்டதாகவும் அவர் கதறி அழுதார். வலியால் துடித்த தன்னை, மாதம்பட்டி ரங்கராஜன் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இது தன்னுடைய மகன் முன்னிலையில் நடந்தது என்றும் ஜாய் கூறினார்.
தொடர்பு துண்டிப்பு
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜாயின் குடும்பத்தினர் மாதம்பட்டி ரங்கராஜனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் குக் வித் கோமாளி படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றபோது, அவரது கேரவனில் வைத்து தனது மேலாளரின் உதவியுடன் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னைத் தாக்கியதாகவும் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனின் காலில் விழுந்து கெஞ்சி, அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அதன்பிறகுதான், ஒருநாள் படப்பிடிப்புக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போனவர், திரும்பி வரவே இல்லை என்றும் ஜாய் கண்ணீருடன் கூறினார்.
சமீபகாலமாக, நாஞ்சில் விஜயன் போன்ற விஜய் டிவி பிரபலங்கள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருமண உறவில், வன்முறை என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஜாய் கிறிஸ்டினாவுக்கு மட்டுமல்ல, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆண்களுக்கும் சமூகம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். இந்தச் சமூகம் அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரும். பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வலியை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications