பல ஜென்மம் தாண்டி வந்த உறவே! ஜாய் கிறிஸ்டில்லாவிற்கு முட்டி போட்டு பூங்கொத்து கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜன்
சென்னை: சமையல் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராக உயர்ந்து, இன்று மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜன். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதைப் பற்றி விளக்கம் கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் டிசைனர் ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு புரபோஸ் செய்த வீடியோவை ஜாய் வெளியிட்டு இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜனின் திரை பயணம்
கோயம்புத்தூரில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய மாதம்பட்டி ரங்கராஜன், விரைவில் ஒரு பிரபலமான சமையல் கலைஞராக மாறினார். பல திரைப்பட பிரபலங்களுக்குச் சமைத்ததன் மூலம், அவருக்குச் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில், அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சில்லுக் கருப்பட்டி போன்ற திரைப்படங்களும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டதும், அவரது புகழை மேலும் உயர்த்தியது.
இரண்டாவது மனைவிக்கு காதல் கவிதை
சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சையான செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்தது. அந்த நேரத்தில் டிசைனர் ஜாய் கிறிஸ்டில்லா உடன் மாதம்பட்டி ரங்கராஜன் என்று திருமணமாகிவிட்டது என்று புகைப்படங்களும் வெளியானது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இன்னும் தான் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி என்றுதான் ப்ரோபைல் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதில் ரங்கராஜன் தன்னை ஏமாற்றிவிட்டார் தான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் தன்னை அடித்து சித்திரவதை செய்கிறார். தன்னுடைய இப்போது பேசவில்லை என்று பல குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ஜாய் கிறிஸ்டில்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு காதல் பரிசை அளித்துள்ளார். மாதம் பட்டி ரங்கராஜன் முட்டிபோட்டு, ஒரு பூங்கொத்தைக் கொடுத்து, மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ண மூடி பாடலின் வரிகளைப் பேசியுள்ளார். "பல ஜென்மம் தாண்டி வந்த உறவே" என்று அவர் கூறிய வரிகள், அவரது காதலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை, ஜாய் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவிற்குப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை காஜல் பசுபதி உட்படப் பல பிரபலங்கள், ஜாய் கிறிஸ்டில்லாவிற்க்கு ஆதரவு தெரிவித்து, கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும்
அதுபோல சில நாட்களுக்கு முன்பு, ஜாய் கிறிஸ்டில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கருவில் உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பி இருக்கிறான். இதுதானா உன் அன்பு அறிமுகம்?" என்று ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவைப் பகிர்ந்திருந்தார்.
இந்த காட்சிகள், மாதம்பட்டி ரங்கராஜனின் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காதல், துயரம், சமரசம் என ஒரு திரைப்படக் கதை போல நகரும் அவரது வாழ்க்கை, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் எந்த விளக்கமும் கொடுக்காததால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications