நிக்சன் காதருகே போய்.. வார்த்தையை விட்ட மாயா.. கமல் பொறுப்பேத்துக்கல..பிரதீப் விஷயத்தில் புது புயல்
சென்னை: நடிகர் பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் புதிய பூகம்பம் ஒன்று எழுந்துள்ளது. நடிகை மாயா இதில் கமல்ஹாசன் மீதும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார்.

கமல் விசாரிக்கவில்லை: கமல்ஹாசன் இதை சரியாக விசாரிக்காமல் முடிவு எடுத்துவிட்டார். அதோடு பிரதீப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதில் கமல் தீர விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
முக்கியமாக தற்போது விஜே அர்ச்சனா போன்றோர் கேட்கும் கேள்விகளை பார்க்கும் போது.. மாயா கேங்க் திட்டமிட்டு பிரதீப்பிற்கு இருக்கும் புகழ் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்களோ என்றும் கேட்க தோன்றுகிறது. இதன் காரணமாகவே கடந்த 4 நாட்களாக பிரதீப் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரின் பெயர் உச்சத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த வாரம் இதற்கு கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் கூட பெரிதாக பிரதீப் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
விடாத மாயா - சிக்கும் கமல்ஹாசன்: பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் புதிய பூகம்பம் ஒன்று எழுந்துள்ளது. நடிகை மாயா இதில் கமல்ஹாசன் மீதும் விமர்சனங்களை வைத்துள்ளார். அதன்படி நேரடி 24/7 ஒளிபரப்பில் பேசிய மாயா.. பூர்ணிமாவிடம்.. இங்கே எல்லாம் தப்பா இருக்கு. யாரும் முற்போக்காக யோசிப்பது இல்லை. எதுவுமே சரியில்லை.
நாம்தான் நல்லவர்களாக இருக்கிறோம். நாம்தான் சரியாக யோசிக்கிறோம். மற்றவர்கள் யாரும் யோசிப்பது இல்லை என்று கூறினார்.
அதன்பின் நடந்த உரையாடல்களிலும் கூட.. இனிமேல் எந்த பெண்ணும் தனக்காக பேச மாட்டாள். ஏதாவது பிரச்சனை நடந்தால் அதை பற்றி பேச மாட்டார். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நிலைமை. அதோடு இங்கே கண்டிப்பாக நாங்கள் எங்களுக்கு பிரச்சனை நடந்தால் அதை பற்றி பேச மாட்டோம் என்று மாயா, பூர்ணிமா இருவரும் பேசி உள்ளனர்.
புயல்: இந்த நிலையில்தான் இன்று நிக்சனிடம் புதிய விஷயம் ஒன்றை மாயா கூறியுள்ளார். அதில்.. வெளியே போனால் பாதுகாப்பு இருக்குமா.. நாம் குற்றஞ்சாட்டி உள்ளோம்.. "அவரிடம்" இருந்து பாதுகாப்பு இருக்குமா? என்று கேட்கிறார். நிக்சன் காதருகே சென்று மைக்கை மூடும் விதமாக அவர் சொல்கிறார்.
அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.. நாம் ஆண்டவர் கமலிடம் சொல்லுவோம்.. அவர் பார்த்துக்கொள்வார் என்று நிக்சன் பதில் சொல்கிறார். இதன்பின் மாயா சில விஷயங்களை வெளியே கேட்காதபடி சொல்ல அதற்கு நிக்சனும் வெளியே கேட்காதபடி பேசுகிறார்.
இதோடு நிற்காமல் தொடர்ந்து பேசிய மாயா.. கமல் பொறுப்பேற்கவில்லையே. அவர்கள்.. நம்மை பார்த்து நீங்கள் தானே ரெட் கார்டு கொடுத்தீங்க.. நீங்க தானே அவரை வெளியே அனுப்புனீங்க என்று நம்மை நோக்கித்தான் கை காட்டினார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் accountability எடுக்கவில்லையே என்று கமல் ஹாசன் மீதே மாயா புகார் வைத்துள்ளார்.
இந்த மோதல் காரணமாக இந்த வார இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் என்ன சொல்வார்.. மாயாவிடம் கேள்வி கேட்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications