மாயன் மச்சினிக்கு நிச்சயதார்த்தம்.. ஆனால் அவளுக்குப் பிடிக்கலை.. அடுத்து நடந்தது என்ன
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் மச்சினிக்கு நிச்சயதார்த்தம் நடக்குதுன்னு மாயனை வீட்டில் இருக்க கூடாதுன்னு சொல்றாங்க.
ஆனா, பாவம் பாருங்க மாயனின் மச்சினிச்சிக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. நிச்சயதார்த்தத்தை நிறுத்தணும்னு மாமாகிட்ட மட்டும் சொல்றா.

மாயன்தான் வீட்டு முதல் மாப்பிள்ளைன்னு, ரெண்டாவது மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லலை. இதை வச்சு தேவியும், மாயனும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பது போல பேனர் அடிச்சு ஒட்டிடறான் மாயன்.

மாப்பிள்ளை வீட்டார் கோச்சுக்கிட்டு போறாங்க.தேவியின் தம்பி மாயனை அடிச்சுடறான். மாயன் என்ன சொல்ல வர்றான்னு தேவியும் கேட்கலை.
தன் தம்பி டாக்டர் அரவிந்த் கிட்ட போயி கட்டு .போட்டுக்கிட்டு வர்றான். பிறகு உண்மையை சொல்ல தேவி என் கிட்டயாவது அவ சொல்லி இருக்கலாமேன்னு கேட்டுட்டு சாரி மாயன்னு சொல்றா.அதுக்கு இடையில் தனக்கு சூப் ஊட்டிக்கிட்டு இருந்த பாட்டியை நைசா கண்ணை காமிச்சு சூப்பை வச்சுட்டு போக சொல்றான்.பாட்டியும் கண்ணை அடிச்சுக்கிட்டே கிளம்பிடறாங்க.

என்னங்க நீங்க..உங்க தம்பி என்னை அடிச்சப்போ நானும் அடிச்சு இருப்பேன்.உங்களுக்கு உங்க தம்பின்னா உசிரு..அவனை அடிச்சா உங்களுக்கு வலிக்கும். நீங்க எனக்கு உசிரு.. உங்களுக்கு வலிச்சா எனக்கு வலிக்கும்னு டயலாக் பேசறான்.

சரி சூப் குடிங்கன்னு சொல்றா..என்னங்க..எப்படி நான் குடிக்க முடியும். என் கையிலதான் கட்டு போட்டு இருக்கேனேன்னு சொல்றான்.அவ நெருங்கி வர..ஐயோ உங்களுக்கு எதுக்கு சிரமம்..நான் உங்ககிட்ட வர்றேன்னு சொல்லி வர்றான்.
தேவி சூப் ஊட்டிவிட..ஆஹா..ஆஹா.. இதுவரைக்கும் அந்த கிழவி ஊட்டிகிட்டு இருந்துச்சு சப்புன்னு கெடந்த சூப் இப்போ உங்க கையால குடுத்ததும் இப்படி ருசிக்குதேன்னு சொல்றான். ஊட்டுங்க.. ஊட்டுங்கன்னு ரசிச்சு குடிக்கறான். தேவி குடுத்துகிட்டே இருக்கா.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications