யோவ் மாப்ளை.. போட்டுத் தாக்கி கலாய்த்த மாயன்.. சங்கடத்தில் நெளிந்த மகா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பொதுவாகவே பரபரப்பாக இருக்கும். அதிலும் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.
முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் தொடங்கும் போது இந்த சீரியல் இனி எப்படி இருக்குமோ என்று பலர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது ரேட்டிங்கில் இது வாராவாரம் முன்னேறி வருவது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
விட்ட இடத்தை மறுபடியும் பிடித்துவிடும் போல போகிற போக்கைப் பார்த்தால் மாயனின் கேரக்டரை மகாவிற்கும் பிடிக்குமா இந்த அளவிற்கு மகாவின் மனசை நம்ம மாயன் புரிந்து இருக்கிறார் என்று நிரூபிக்க இதற்காக போட்டி போட்டுக்கொண்டு மாயன் நடத்தும் வேடிக்கைகள் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

2வது பாகம்
நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகம் லாக்டோனுக்கு முன்பு நம்பர் 1 இடத்தில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் லாக் டோன்க்கு பிறகு அந்த சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாமல் அதனை அப்படியே முடித்துவிட்டு இரண்டாம் பாகம் எடுத்தாலும் தற்போது இரண்டாம் பாகமும் சூடுபிடிக்க கிளம்பியிருக்கிறது. முதல் பாகத்தில் மாயன் தேவி கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவும் ரசித்துப் பார்த்திருந்தனர்.

அசத்தும் மகா
இந்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அதை அப்படியே சேர்த்து விட்டு அந்த தேவி கேரக்டருக்கு பதிலாக மகாவாக ரட்சிதாவை களமிறக்கி உள்ளனர். முதலில் இந்த சீரியல் எப்படி இருக்குமோ என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது பழைய மாயன் தேவி ஆக இப்போது மாயன் மகா ஜோடியையும் ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

பழைய ஜோடி போலவே கலக்குதே
பழைய சரவணன் மீனாட்சியில் இருந்த மாதிரியே ரட்சிதா அதே சாயலில் இருந்தாலும் இந்த சீரியலில் மாயனோடு இவர் இணைந்து நடிக்கும்போது இதுவும் புது வகையாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள். பொதுவாகவே ரட்சிதாவுக்கு சரவணன் மீனாட்சியில் தொடங்கி இன்று வரையிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அதனால் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் அவரை களமிறக்க முடிவு செய்தனர்.

உருகி வழியும் பாசம்
தற்போது இவர் இந்த சீரியலில் மாயனை கொஞ்சம் கூட கண்டுக்காமல் இருக்கிறார். இது பொதுவானது தான் என்றாலும் மாயன் கேரக்டர் மகா மீது உருகி உருகி வழியும் பாசத்தை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் கடுப்பாதான் இருக்கு. மகாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக முடிந்து கல்யாண ஏற்பாடு தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் போது அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென்று மாயனும் அவரது நண்பரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

டெஸ்ட் வைக்கும் மகா
அப்போது எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. திருமண வீட்டில் வைக்கும் சின்ன சின்ன டெஸ்ட்டில் கூட நம்ம மாயன்தான் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார். மாப்பிள்ளை பையன் பாவமாக ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மகாவின் கேரக்டரை முழுமையாக புரிந்து மகாவை மட்டுமல்ல குடும்பத்தாரையும் அதிர்ச்சியடைய வைக்கிறார் மாயன். பதிலெல்லாம் சும்மா டான் டானென்று வருகிறது.

மாயன் அதிரடி
இன்றைய எபிசோடில் மகா மௌனமாக கைகளினால் ஒவ்வொரு திரைப்படத்தையும் சொல்லிக் காட்ட அதை மாப்பிள்ளையும் மாயனும் கண்டுபிடிக்க வேண்டும் என்று போட்டி வைத்து இருக்கிறார்கள். மகா சொல்வதை ஒன்றைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் மாப்பிள்ளை தவிக்கிறார். ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் டக்கு டக்குனு மாயன் பதிலை சொல்லிவிட்டு அடிச்சிக்கிட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.

நெளிந்த மகா
இதைப்பார்த்த மகாவும் அவரது குடும்பமும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே மருதாணி வைத்ததில் மாப்பிள்ளை வைத்த கையை விடவும் மாயன் வைத்தது சிவந்து இருக்கு. அதுல இப்போ மாயனின் செய்கைகளையும் மாப்பிள்ளையை புரிந்து கொள்ள முடியவில்லை . இனி என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். நல்லாதாய்யா மாப்பிள்ளை இந்த போட்டியும் இருக்கு.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications