பிக்பாஸ் 8 ப்ரோமோவை வைத்து மாயா போட்ட பதிவு.. விஜய் சேதுபதி ரியாக்ஷன்! ஆனால் தினேஷ் கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது லேட்டஸ்டாக வெளியான ப்ரோமோவை குறிப்பிட்டு முந்தைய போட்டியாளரான மாயா வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சர்ச்சைகளாலும், வதந்திகளாலும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலம் அடைந்து விடுகிறார். வெளியே நல்ல பெயரோடு இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இவரா? இப்படி என்று முகம் சுளிக்கும் அளவிற்கு பெயர் வாங்கி வெளியே வருகிறார்கள். அதே நேரத்தில் சில போட்டியாளர்கள் வெளியே கரடு முரடாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுடைய கேரக்டரை பார்த்து ரசிகர்கள் ஆகா ஓகோ என்று பாராட்டியும் தள்ளி இருக்கிறார்கள்.

சில போட்டியாளர்களுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்து அவர்களை வெற்றி பெறவும் வைத்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக ஆரி அர்ஜுனன், ராஜு உட்பட பலரை சொல்லலாம். இதுவரைக்கும் ஏழு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்திருக்கிறது. அதில் கடந்த ஏழாவது சீசனில் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் கமல்ஹாசனையும் ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வந்தார்கள்.
அதிலும் ஒரு சில போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார் என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் எட்டாவது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகி இருக்கிறார் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி போட்டியாளராக கலந்து கொள்கிறார். தற்போது வரைக்கும் விஜய் சேதுபதி பங்கு பெற்ற இரண்டு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதிலும் இரண்டாவது ப்ரமோவில் கடந்த சீசனில் நடந்த பல நிகழ்வுகளை மையப்படுத்தி நான் அப்படி இல்லை என்று விஜய் சேதுபதி சொல்வது போல தான் ப்ரோமோ இருந்தது. அதாவது குருபிஸம், டாமினேட் பண்றவர்களை ஓட விட வேண்டும். தப்பு செய்தவங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். வழவழன்னு வாழைக்காய் பஜ்ஜி மாதிரி பேசாம சுர்ருன்னு மிளகாய் பஜ்ஜி மாதிரி பேசணும். யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க கண்டுபிடிக்கணும்.

அது போல வார இறுதி நாட்களில் பவ்யமாக இருப்பாங்க வார நாட்களில் நான்தான் என்று ஆடுவாங்க அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கணும் என்று பல நிகழ்வுகளை மையப்படுத்தி அந்த ப்ரோமோவில் இருந்த நிலையில் இதை குறிப்பிட்டு ஏழாவது சீசனில் போட்டியாளரான மாயா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதில் தற்போது வெளியான ப்ரோமோவை நான் பார்த்தேன். அருமையாக இருந்தது மக்கள் செல்வன் அதில் சிறப்பாக இருக்கிறார். நான் பிக் பாஸ் பற்றி பார்வையாளர்களுக்கு போட்டியாளர்களுக்கும் இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். பிக் பாஸ் என்பது பொழுது போக்கிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.

பார்வையாளர்களை டிவியில் கவர்ந்திழுக்கும் ஒரு நிகழ்ச்சி இதில் யார் நல்லவர் அல்லது கெட்டவர் என்று உறுதியாக சொல்ல முடியாது. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக வேலை செய்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாது. பல ரகசியங்கள் அங்கே இருக்கிறது. அவற்றை அங்கு இருக்கும் போட்டியாளர்கள் வெளிப்படுத்த மாட்டோம். உங்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று உண்மை தெரியாது.
உண்மைகள் மறைந்தே இருக்கும். இது தெரியாமல் நீங்கள் ஆண் ஆதிக்கம் மற்றும் பெண் வெறுப்பை காட்ட வேண்டாம். பெண்கள் மீது நீங்கள் வெறுப்பை காட்டாதீர்கள். அவர்கள் விரும்பியதை அணியவும் சுதந்திரமாக அவர்களை வெளி காட்டவும் அனுமதியுங்கள். பெண்கள் அவர்களுடைய கோபத்தை காட்டுவதற்கும் சொந்த மனதை காட்டுவதற்கும் அனுமதியுங்கள். அவர்கள் அவர்களாக இருந்தால் பண்பு இல்லாதவர்கள் என்று நீங்கள் அவர்களை கூப்பிட வேண்டாம்.
அதுபோல உமன் கார்டு பெண்கள் பயன்படுத்துவும் அனுமதியுங்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதற்காக ஆதாரத்தை நீங்கள் கேட்காதீர்கள் என்று நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் பலர் பிரதீப் ஆண்டனி பெயரில் சொல்லியே கமெண்டில் பதில் கொடுத்து வருகிறார்கள்.
அதுபோல தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் “ரகசியம் என்று ஒன்றும் இல்லை அது உங்களுக்குள் ரகசியம் இருக்கும் வரை.. உண்மை ஜீரணிக்க எப்போதும் கசப்பாய் இருக்கும் ஆனால் அதுவே பலம்” என்று ஒரு ஸ்டோரி போட்டு இருக்கிறார். அதோடு விஜய் சேதுபதி வந்து நியூ ப்ரோமோவை பாராட்டியும் போஸ்ட் போட்டிருக்கிறார். இதனால் தினேஷ் மாயாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கிறாரா? என்று கேள்விகள் எழும்பி வருகிறது. மாயாவின் இந்த பதிவு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை தட்டி விடுங்க.












Click it and Unblock the Notifications