Mayilsamy: ஷூட்டிங்கில் ரசம் வச்சு கொடுத்த பெண்ணுக்கு ரூ.70 ஆயிரம் கொடுத்த மயில்சாமி! மகன் உருக்கம்
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசம் வைத்து கொடுத்த பெண்ணின் வீட்டுக் கடனை கூட அப்பா அன்றைய தினமே அடைத்து கொடுத்தார் என மயில்சாமியின் மகன் அன்பு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மயில்சாமி மகன் அன்பு ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அப்பா இறந்ததும் நிறைய பேர் எங்களுக்கு போன் செய்து உங்கப்பாதான் ஸ்கூல் ஃபீஸ் கட்டினாரு, காலேஜ் ஃபீஸ் கட்டினாருனு எங்களுக்கு பில்லோட அனுப்பி வச்சாங்க. அதை பார்க்கும் போதுதான் அவர் செய்த நல்லவற்றில் பாதியை மறைத்துவிட்டார் என தெரிந்தது.

அப்பா உயிருடன் இருந்த போது நான் வெளியே கிளம்பும் போது எப்படி அவரிடம் சொல்வேனோ, அதே போல்தான் இன்றும் அவருடைய போட்டோவை பார்த்து சொல்லிவிட்டு வருகிறேன்.
அப்பா நடிகர்
அப்பா நடிகர் என்பதாலேயே எங்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடாது. நடிகர்களுக்கு ஒரு மகனோ மகளோ இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் அவர்களின் திறமைகள் வெளியே இருந்து பார்க்கும் போது தெரியாது. யார் நடிக்க வந்தாலும் நல்ல ஸ்கிரிப்ட் இருக்கணும், மக்களுக்கு பிடிக்கணும், அப்போதுதான் ஏதோ நிலைக்க முடியும். இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய ஸ்டாரின் மகனாக இருந்தாலும் காணாமல்தான் போகணும்.
அப்பா நடிக்க வந்தது
அப்பா நடிக்க வந்தது எப்படி என்றால், அவர் சிறிய வயதிலேயே நிறைய மிமிக்ரி எல்லாம் செய்தார். அவருடைய நண்பர்கள் எல்லாம் அப்பாவை ஊக்கப்படுத்தி சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை வைத்து 13 வயதில் தனது வேலையை தொடங்கினார்.
ஷூட்டிங்கில் சமையல்
ஒரு நாள் அப்பா ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றார். அப்போது அந்த ஊரில் சிலரிடம் சிக்கன் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்து சமைத்து கொடுக்கச் சொன்னதும் அவர்கள் அப்பாவுக்கும் பட யூனிட்டுக்கும் சமைத்து கொடுத்தனராம். சமைத்தவர்களுக்கு எல்லாம் அப்பா காசு கொடுத்தாராம். அப்போது ரசம் வைத்து கொடுத்த அம்மாவிடம் காசு கொடுத்தாராம் அப்பா.
ரசம் வைத்த அம்மா
அதில் ரசம் வைத்த ஒரு அம்மா, என் அப்பாவிடம் , "உன்னை என் தம்பி மாதிரி நினைத்துதான்பா சமைத்து கொடுத்தேன், எதுக்குப்பா காசெல்லாம் கொடுக்குறே" என்று கேட்டிருக்காங்க. அதற்கு அப்பா உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள், நான் தீர்த்து வைக்கிறேன் என்றாராம். அதற்கு அந்த அம்மா, அதெல்லாம் எதுவும் இல்லை என்றாராம்.
கடன் இல்லையா
பின்னர் அப்பாவே, எதுவும் இல்லையா, ஏம்மா கடனெல்லாம் இல்லையா என கேட்டாராம். அதற்கு அந்த அம்மா வீட்டுக் கடன் ஒரு 70 ஆயிரம் இருக்குனு சொல்லியிருக்காங்க. அன்னிக்கு ஷூட்டிங்கில் வந்த காசை எடுத்து அந்த அம்மாவிடம், அப்பா கொடுத்து இதை வைத்து கடனை அடைத்துவிடுங்கள் என சொன்னாராம். அப்போது யூனிட்டில் இருந்தவர்கள் எல்லாம் அய்யோ இது தெரிந்திருந்தால் நானே ரசம் வைத்து கொடுத்திருப்பேனே என்றனராம்.
எம்ஜிஆர்தான் பிடிக்கும்
என் அப்பாவை போல் எனக்கும் எம்ஜிஆர்தான் பிடிக்கும். என் வீட்டில் எம்ஜிஆர் படங்களை தவிர வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை. வீட்டில் செய்திகள், எம்ஜிஆர் படங்கள், அதை விட்டால் டிஸ்கவரி சேனல் இதுதான் ஓடும்.
100 வாட்டி கூட போட்டு பார்ப்பார்
எம்ஜிஆர் நடித்த படங்களை எல்லாம் 100 வாட்டி கூட போட்டு போட்டு அப்பா பார்த்துக் கொண்டே இருப்பார். நாங்களும் குழந்தையிலிருந்து அதையே பார்ப்பதால் எங்களுக்கு எம்ஜிஆர் என்றால் பிடிக்கும். அப்பா நிறைய பேருக்கு வீட்டு வாடகை எல்லாம் கொடுத்திருக்காரு.
இரு சக்கர வாகனம்
நிறைய பேருக்கு வண்டி வாங்கி கொடுத்திருக்கிறார். உயிர் இருக்குல எப்போ வேணும்னாலும் சம்பாதிக்கலாம். இல்லாதவங்களுக்கு உதவி பண்ணனும்னு அப்பா அடிக்கடி சொல்வாரு. அப்பா உதவி செய்யாம இருந்திருந்தா அந்த பணத்தில் 3, 4 வீடு வாங்கியிருக்கலாம் என நிறைய பேர் சொல்வாங்க. விவேக் சார் கூட அப்பாவை திட்டுவாரு, சேர்த்து வைக்காமல் இப்படி மொத்தமாக செலவு செய்றியேனு.
நல்ல காலம்
எங்களுக்கும் நல்ல காலம் வந்தால் அவர் விட்டுச் சென்ற பணிகளில் 10 சதவீதம் செய்தால் கூட அவர் ஆன்மா சந்தோஷப்படும். இவ்வாறு மயில்சாமி மகன் தெரிவித்தார். மேலும் தனது அப்பா எல்லாருக்கும் உதவினார். ஆனால் அவரது பிள்ளைகளான எங்களுக்கு உதவ அப்பாவின் நண்பர்களே முன் வரலை என தெரிவித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications