“நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடும்”.. சரிகமபவில் மெக்கானிக் செந்தமிழனுக்கு “சினேகன்” கொடுத்த பரிசு
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் நிகழ்ச்சி கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வரும் மெக்கானிக் செந்தமிழனும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் பாடிய பாடலை கேட்டு அவருக்கு நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்த சினேகன் உட்பட பலர் பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் சீரியலுக்கு மாற்றாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதனாலயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப சீனியர் சீசன் 5
சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து சீனியருக்கான ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பல போட்டியாளர்கள் ஆடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் கரூரை சார்ந்த மெக்கானிக் செந்தமிழன் என்பவரும் கலந்து கொண்டிருக்கிறார். செந்தமிழன் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். தான் வேலை செய்யும் மெக்கானிக் ஷெட்டில் கிடைக்கும் நேரங்களில் பாடல்கள் பாடி அதை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.
சரிகமப செந்தமிழன்
இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு சரியான மேடை கிடைக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் இப்போது இவரும் ஒரு போட்டியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வாரத்தில் அவர் "வெற்றி கொடி கட்டு" என்ற பாடலை பாடி இருந்தார். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
கவிஞர் சினேகன்
அதேபோல இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞரும் நடிகருமான சினேகனும் கலந்து கொண்டார். அவர் செந்தமிழனின் பாடலை கேட்டு அவருக்கு ஒரு ஹெட்செட் பரிசாக கொடுத்திருக்கிறார். அவரை தொடர்ந்து பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய கையில் இருந்த பணத்தை கொடுத்து இருக்கிறார். அந்த பணத்தை வாங்கிய செந்தமிழன், நான் எந்த சூழ்நிலையிலும் இந்த பணத்தை செலவு பண்ண மாட்டேன், நான் சாகுற வரைக்கும் இந்த பணத்தை பார்த்துக் கொண்டே இருப்பேன். இது எவ்வளவு பெரிய கிப்ட் என்று எனக்கு தெரியும் என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
பிளாட்டினம் ஷவர்
அதுபோல செந்தமிழனுக்கு பிளாட்டினம் ஷவர் வழங்கப்பட்டது. அவருடைய பாடலை ஊக்குவிக்கும் வகையாக அவருக்கு கிடைத்த பாராட்டை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதுபோல செந்தமிழன் முதல் நாள் பாடிய பாடலை கேட்டதும் ரசிகர்கள் இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று கூறி வருகிறார்கள். அதுபோல இந்த சீசனில் இன்னொரு போட்டியாளர் பற்றியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இலங்கை தமிழரான பிரஷாந்த் சொன்ன அவருடைய சோக கதை பலராலும் பீல் பண்ணப்பட்டு வருகிறது. இந்த சரிகமப சீனியர் சீசன் 5 போட்டியாளர்களில் உங்களுக்கு யார் பிடித்தவர்? இந்த சீசனின் டைட்டில் வின்னராக யார் வரவேண்டும் என்று நினைக்கிறீங்க பாஸ்?
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications