எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனி என்னத்தைப் பேச.. போட்டு உடைத்த மேக்னா
சென்னை: தெரியுமா இந்த சேதி.. தெய்வம் தந்த வீடு சீரியல் நாயகி மேகனாவின் கணவருக்கு 2வது திருமணமாகியுள்ளது.
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட். கேரளத்து அழகி. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
இவர் தமிழை போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சொந்த ஊர்ப் பாசத்தில் மலையாளத்தையும் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

காதல் கல்யாணம்
அதன்பிறகு இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தோல்வியில் கல்யாணம்
பின்னர் சம்மதித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2011 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது இவர்களின் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரையில் இவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை ரொம்ப நாட்களுக்கு நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவரும் அவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

கேப் விழுந்து போச்சு
பின்னர் இவர்களுக்குள் இடைவெளி அதிகமாக ஆரம்பித்ததால் விவாகரத்து வரைக்கும் கொண்டுசென்றது. சமீபத்தில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .விவாகரத்தான சில நாட்களிலேயே டாம் டோனி வேறொரு பெண்ணை இரண்டாவது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது மண வாழ்க்கை குறித்து மேக்னா மனம் திறந்து பேசியுள்ளார்.

ஏன் டைவர்ஸ் செய்தேன்
அதில் அவர் என்னிடம் பல பேர் எதற்காக விவாகரத்து செய்தீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி உள்ளனர். அது முடிந்துபோன ஒன்று என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பேசுவதால் எந்த பயனும் கிடையாது. அது மட்டுமல்லாமல் எதற்காக விவாகரத்து பற்றி மௌனமாக இருக்கிறீர்கள் என்று பலரும் தொடர்ந்து என்னை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் இதுவரை எந்த நேரத்திலும் ஒரு வார்த்தை கூட இது பற்றி பகிர்ந்து கொண்டது கிடையாது. இது பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
Recommended Video

சூர்யான்னா ரொம்ப பிடிக்கும்
மேகனாவுக்குப் பிடித்த நடிகர் சூர்யா தானாம். அவர் காலேஜ் படிக்கும்போது நோட்டுப் புத்தகத்தில் சூர்யா ஸ்டிக்கர் தான் அதிகமாக ஒட்டி வைத்திருப்பாராம் . அவ்ளோ பிடிக்குமாம் அவரை. மேலும் நடிகைகளில் சுதா சந்திரனை ஐ ரொம்ப பிடிக்குமாம். சுதா சந்திரன் உடன் தெய்வம் தந்த வீடு சீரியலில் மேக்னா நடிச்சு இருப்பாங்க. அவர் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லையாம். சீரியலை போலவே அவர் சுதாவை அம்மா என்றுதான் அழைப்பாராம். அந்த அளவுக்கு இருவருக்கும் பாசம் இருக்கிறதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications