விவாகரத்து போட்டோசூட் நடிகையின் கணவரை கண்டுபிடித்து கொடுங்க..களத்தில் ஆண்கள் சங்கம்..காரணம் இதுதானா?
சென்னை: சீரியல் நடிகை ஷாலினி சமீபத்தில் விவாகரத்து போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
இது குறித்து அவர் தான் இதை பிரபலமாவதற்காக செய்யவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய கணவரின் புகைப்படத்தை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஆண்கள் சங்கத்தினர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இவர் துபாய்க்கு டான்ஸ் நிகழ்ச்சிக்காக சென்றிருக்கும் போது அங்கு ரியாஸ் என்பவர் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய ஃபேன் என்று தான் ரியாஸ் ஷாலினி இடம் பழங்கினாராம். பிறகு இருவருக்கும் கருத்து ஒத்துப்போக இருவரும் தனியாக வாழ்ந்து இருக்கின்றனர். பிறகு காதலிக்கும் செய்தியையும் ஷாலினி வெளிப்படையாக அறிவித்திருந்திருக்கிறார்.

அப்போது ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மனைவி விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் ஷாலினிடம் கூறியிருக்கிறார். பின்பு இருவரும் இந்து முறைப்படி முதலில் திருமணம் செய்து இருக்கின்றனர். பிறகு ஷாலினி ரியாஸ்காக அவருடைய முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி இருக்கிறார். அதற்கு பிறகு ஷாலினி கர்ப்பமாக இருந்திருக்கிறார். தொடர்ந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அந்த நிலையில் ரியாஸ் பலமுறை தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இருக்கிறார்.
ரியாசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஷாலினி கூறியிருக்கிறார். இந்த நிலையில் இனி இவரோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து ஷாலினி ரியாசிடம் விவாகரத்தை கேட்டதற்கு ஆரம்பத்தில் ரியாஸ் விவாகரத்து கொடுக்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து ரியாஸ் இடம் இருந்து ஷாலினிக்கு விவாகரத்து கிடைத்திருக்கிறது. அதைத்தான் நான் போட்டோ சூட் எடுத்துக் கொண்டாடினேன் என்று கூறுகிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு சீரியல் நடிகை ஷாலினி ஒரே ஒரு விவாகரத்து போட்டோ சூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் பலரும் வியந்து, தேடிப் பார்க்கும் அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார். அதுவரைக்கும் இவர் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்தாலும் அதற்குப் பிறகு இவர் யாராக இருக்கும்? என்ன பின்புலம் என்று பலரும் இவருடைய ஐடியை சல்லடை போட்டு தேடி வந்தனர்.
அது மட்டுமில்லாமல் இவருடைய விவாகரத்து போட்டோ ஷூட்க்காண காரணத்தை குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இருந்தாலும் மீம்ஸ்களில் இவருடைய புகைப்படங்கள் தான் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தான் எதற்காக இந்த போட்டோ சூட் எடுத்தேன் என விரிவாக விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தார்.

பப்ளிசிட்டிக்காக இந்த போட்டோ சூட் எடுக்கவில்லை. மற்ற பெண்களுக்கு மெசேஜ் சொல்ல தான் எடுத்தேன் என்று அதில் அவர் கூறியிருந்தார். இருந்தாலும் ஷாலினியை ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறனர். இன்னொரு தரப்பினர் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த நடிகையின் கணவரை கண்டுபிடித்துக் கொடுங்க இதைவிட பெரிய செலிப்ரேஷன் நாங்க ஏற்பாடு செய்கிறோம் என ஆண்கள் சங்கம் ஒன்று தெரிவித்திருக்கிறது. தற்போது அந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரல் ஆகியும் வருகிறது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications