வாவ்.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மகளை கட்டி அணைத்தபடி.. யார்னு தெரியுதா!
சென்னை: சீரியலில் பார்க்கும் மாமியார் வேறு நிஜத்தில் பார்க்கும் அம்மா வேறு என தற்போது ரோஜா சீரியலில் ரோஜாவின் மாமியாராக நடிக்கும் காயத்ரி சாஸ்திரி மகளோடு எடுத்திருக்கும் போட்டோஸ்கள் தான் ரசிகர்கள் மத்தியில் செம வைரல்.
தற்போது சீரியல் பார்க்க வேண்டும் என்றால் வீட்டில் பார்க்கின்றனர். இல்லையென்றால் செல்போனிலேயே எங்கு இருந்த படியும் பார்த்து வருகின்றனர்.
ஆனால் முன்பு இந்த மாதிரி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சீரியல் பார்க்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்று அல்லது அடுத்த தெருவிற்கு சென்று கூட சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தோம். அது ஒரு காலம்.

பாசக்கார சீரியல்கள்
சீரியல் மீது மட்டுமல்லாமல், சீரியல் நடிகைகளின் மீதும் பாசம் வைத்திருந்தனர் அந்தக் கால சீரியல் ரசிகர்கள். தங்கள் வீட்டிலோ அல்லது குடும்பத்திலோ நடக்கும் பிரச்சனைகளை சீரியலில் காட்டி வருவதால் உடல் களைத்து வீட்டுக்கு வரும் மக்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். அதுவும் கிராமப் புறத்து மக்கள் அடுத்த நாள் வேலைக்கு செல்லும் இடத்திலோ வயல்காட்டில் கூட இந்த சீரியலின் கதைகளைத்தான் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பேசிக்கொண்டிருந்தனர் .

ஒன்றிப் போனார்கள்
அப்படி அந்தக் காலத்து சீரியல் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட சீரியல்களில் ஒன்றுதான் மெட்டி ஒலி. இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் இருந்த வரவேற்பை பார்த்து தான் தற்போதும் அது மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் அந்த சீரியலில் சரோஜாவாக நடித்த காயத்ரி சாஸ்திரியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. மெட்டி ஒலி சீரியலில் நடிக்கும்போது ஒல்லியாக குமரிப் பெண்ணாக இருந்த இவர் தற்போது குடும்பத் தலைவியாக மாறி விட்டார்.

மெட்டி ஒலி சரோ
அழகான ஒரு மகளுக்கும் தாயாக இருக்கிறார். உடல் எடை கூடி இருந்தாலும் இவரை பார்த்ததும் பலரும் நீங்கள் சரோ தானே என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு எளிதில் இவரது முகத்தை கண்டுபிடிக்கும் வகையில் இவர் பல வருடங்களுக்கு முன்பே ரசிகர்களின் மனதில் சரோ வாக வாழ்ந்து விட்டார். இன்னும் வாழ்ந்து வருகிறார். இப்போது ரோஜா சீரியலில் மாமியாராக நடித்து வருகிறார்.

அப்ப சரோ.. இப்ப கல்பனா
அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கல்பனாவாக வாழ்ந்து வருகிறார். கல்பனா என்று சொல்வதை விடவும் ரோஜாவின் மாமியார் ஆகவும் அர்ஜுனின் அம்மாவாகவும் வாழ்ந்து வருகிறார். சிலருக்குதான் கேரக்டருக்கு தகுந்த மாதிரியே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் இவருடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரியே நடிப்பு வாய்ப்பு கிடைப்பதால் தன்னுடைய கேரக்டரில் பட்டையை கிளப்பி விடுகிறார் .

சூப்பர் மாமியார்
இவரை சீரியலில் பார்த்த பல பெண்களும் தனக்கு இப்படி ஒரு மாமியார் கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இவருடைய உண்மையான கேரக்டரை அப்படியே இந்த சீரியலில் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இவர் சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் சீரியல் என தொலைக்காட்சித் துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

பார்வதி தரிசனம்
டிடி நேஷனலில் ஒளிபரப்பான ஓம் நமசிவாய என்ற பக்தி சீரியலில் பார்வதி கேரக்டரில்
அப்படியே சாட்சாத் அந்த அம்மன் போலவே தரிசனத்தை கொடுத்திருந்தார் .இவரை இந்த சீரியலில் பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மன் போலவே இருக்கிறீர்கள் என கூறி வந்தனர். நடிகைகள் பலரும் நடிக்கும்போது கேரக்டராக மாற்றி விடுவர் .ஆனால் கேமராவை ஆப் செய்ததும் தன்னுடைய உண்மையான கேரக்டருக்கு வந்து விடுவர் .

அதிரடிதான்
அந்த மாதிரி தான் இவரும் கேமராவை ஆன் செய்ததும் கேரக்டரில் முழுசாக இறங்கி விடுகிறார் .சூட்டிங் இல்லாத நேரத்தில் அந்த சீரியல் கதாநாயகிகளுடன் ஆட்டம் போட்டு ஜாலியாக இவர் என்டர்டைன்மென்ட் செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இவரை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் நீங்க உண்மையிலே இப்படிதான் இருப்பீங்களா என வீடியோவை நம்பாமல் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

மகளுடன் சூப்பர் போட்டோ
நடிப்பையும் தாண்டி தற்போது தனது 6 வயது மகளுடன் இவர் கொஞ்சலான போட்டோஸ் போட்டுள்ளார். ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் பட்டு புடவையோடு கலக்கலாக தன்னுடைய ஜெராக்ஸ் போலவே இருக்கும் மகளை கட்டி அணைத்து இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே குட்டி சரோ ரெடி ஆகிட்டாங்க போல என்று கேட்டு வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications