அந்த மாதிரி இல்லை.. அது ஒரு ஆக்சிடெண்ட்.. ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து போஸ் வெங்கட் கூறிய விளக்கம்
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நிலை குறைந்தது குறித்து அவருடைய நண்பரான மெட்டிஒலி போஸ் வெங்கட் பல தகவல்களை கூறி இருக்கிறார்.
எல்லோருடைய வீட்டிலும் நடப்பது போலத்தான் திடீரென்று ரோபோ சங்கர் உடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு ஆக்சிடென்ட் போல அவருடைய உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது என்றும் அதில் இருந்து விரைவில் பழைய ரோபோ சங்கராக வருவார் என்று அவர் பேசிய வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கிளியால் வந்த பிரச்சனை
சமூக வலைத்தளத்தில் சில மாதங்களாக ரோபோ சங்கர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே அவருடைய வீட்டில் வளர்ந்த கிளியால் அவருக்கு பெரும் தொகையை பைஃனாக கட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பல பேருக்கு வீட்டிற்கு கிளி வளர்த்தால் அதற்கு முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் ரோபோ சங்கரின் ஒரே ஒரு ஹோம் டூரால் லட்சக்கணக்கில் பைஃன் கட்டி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ரோபோ சங்கரின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

முதல் திரைப்படம்
ரஜினிகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படையப்பா திரைப்படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தொடங்கிய ரோபோ சங்கர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் முகம் காட்டி இருந்தாலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவே பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த ஹீட் காரணமாகவே ஜோடி நம்பர் உட்பட பல கேம் ஷோகளில் விளையாடி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

திடீர் உடல் எடை குறைவு
இந்த நிலையில் இயல்பாக வெயிட்டாக இருக்கும் ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில் இருந்து அவரைப் பற்றி மீண்டும் பல்வேறு கேள்விகளும், யூகங்களும் ரசிகர்களின் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் ரோபோ சங்கரின் முகத்தில் களை இழந்து விட்டது அதனால் அவருடைய உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கேள்விகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள்

நண்பரின் விளக்கம்
போஸ் வெங்கட் ரோபோ சங்கரின் உறவினர் என்பதும் ஒரு நண்பராக மாமன் மச்சானாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் போஸ் வெங்கட் ஒரு பேட்டியில் ரோபோ சங்கர் உடல் நிலை குறித்து பேசி இருக்கிறார். அதில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருப்பது உண்மைதான். அவருக்கு சில பிரச்சனைகள் திடீரென்று ஏற்பட்டது எல்லோருடைய வீட்டிலும் ஏற்படுவது போன்றது தான் யாருக்கும் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போவது போலத்தான் அவருக்கும் ஆகி இருக்கிறது. ஆனால் அதற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துகளும் தப்பான கமண்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. அப்படி கருத்து வெளியிடுபவர்கள் தப்பான நபர்களாக தான் இருக்க முடியும்ய இந்த மாதிரி வரும் கமெண்ட்களை படித்தால் ரோபோ சங்கரின் மனது எந்த அளவிற்கு கஷ்டப்படும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.

போஸ் வெங்கட்டின் நம்பிக்கை
ஒருவருக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அதை வைத்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதே நிலைமை நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்காமல் பேசுகிறார்கள். ரோபோ சங்கர் எத்தனையோ செயல்களை செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்த போது அதை எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு இதை மட்டும் குறையாக கூறிக்கொண்டு இருப்பது பார்க்கும் போது தான் வேதனையாக இருக்கிறது. ஆனால் விரைவில் ரோபோ சங்கர் பழைய நிலையில் வந்து விடுவார் என்று போஸ் வெங்கட் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications