மெட்டிஒலி காயத்ரியா இது..? இந்த வயதிலும் சிலம்பாட்டத்தில் கலக்கல்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சிலம்பாட்டம் ஆடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
இவர் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வயதிலும் இவர் இவ்வளவு ஆக்டிவாக சிலம்பம் சுற்றி பலருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அதற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற மெட்டி ஒலி சீரியலை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த பல நடிகைகள் தொடர்ச்சியாக சீரியலில் நடிக்காமல் சீரியலை விட்டு விலகி இருந்தனர். ஆனால் அந்த சீரியலில் நடித்து இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி பலருக்கும் பரீட்சையமானவர்தான்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக அப்பாவி மற்றும் அழுகாச்சி கேரக்டரில் அதிகமாக நடித்து வந்த காயத்ரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் ரொம்பவே லவ்லியான வெகுளியான கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல அந்த சீரியலில் 28 வயதான கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தாலும் எனக்கு அதில் எந்த வருத்தமும் கிடையாது. இதுவும் ஒரு வித்தியாசமான நடிப்பு அனுபவம் என்று தொடர்ச்சியாக இந்த சீரியலில் நடித்து முடித்து இருந்தார்.
அதே நேரத்தில் இப்போது மீண்டும் மெட்டி ஒலி சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது என்றும் அதில் ஏற்கனவே முதல் சீசனில் நடித்த நடிகர்கள் தொடர்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோட்டிவேஷனலான வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் காலை வேளையில் தினமும் அவர் சிலம்பம் பயிற்சி செய்து வருவதை குறிப்பிட்டிருக்கிறார்.
எப்போதுமே வயது என்பது ஒரு நம்பர் மட்டும் தான் நம்முடைய மனது இளமையாக வைத்திருந்தால், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம் என்பதை அடிக்கடி இவர் தன்னுடைய பேட்டிகளில் கூறிக் கொண்டிருப்பார். அது போலவே இப்போது காலையில் தினமும் ஐந்து முப்பது மணிக்கு சிலம்பம் பயிற்சி செய்வதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதோடு இதே போல நீங்கள் சிலம்பம் பயிற்சியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய பதிலை கொடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ரோஜா சீரியலுக்குப் பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் நடிப்பில் எப்போதும் போல பின்னி பெடல் எடுத்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் போது அந்த சீரியல் நடிகைகளோடு ரீல்ஸ் வீடியோ எடுத்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதுவும் அதிகமாக வைரலாகி வருகிறது.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications