“மெட்டிஒலி 2” விரைவில்.. எந்த சேனலில்,எப்போது தெரியுமா? பிரபல சீரியலுக்கு போட்டியாக தான் இந்த கதையா?
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் மெட்டி ஒலி சீரியல் முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் தொடர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுவும் இந்த சீரியல் சன் டிவியில் தான் இப்போதும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதுபோல இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த சீரியலின் சூட்டிங் தொடங்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரைக்கும் ஒளிபரப்பாகி, 811 எபிசோடுகளோடு முடிவடைந்தது. அதுபோல மெட்டி ஒலி சீரியல் கன்னட, மலையாள,இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்தும் ஒளிபரப்பாகி வந்தது.
அது மட்டும் அல்லாமல் அப்போது அந்த நேரத்தில் இந்த சீரியல் அதிகமான டிஆர்பியை பெற்று ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த சீரியலில் டெல்லி குமார் அப்பா கேரக்டரில் நடித்திருப்பார். அவருக்கு காயத்திரி, காவேரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா என ஐந்து மகள்களும் மருமகன்களும் என குடும்பம் கதையாக இந்த சீரியல் பலருடைய அபிமான சீரியல் ஆக இருந்து வந்தது.
இப்போதும் கூட பல 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சீரியலில் மெட்டி ஒலி சீரியல் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் தெருவில் நடந்து கொண்டு போகும் போது கூட பல வீடுகளில் இந்த சீரியலுக்கான "அம்மி அம்மி அம்மி மிதித்து" என்ற பாடல் அப்போது ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடியும். அந்த காலகட்டத்தில் அதிகமான வீடுகளில் டிவி இல்லாமல் இருந்தாலும் பக்கத்து வீட்டில் போய் இந்த சீரியலுக்காக காத்திருந்தவர்கள் பல பேர்.
இப்போதைய சூழ்நிலையில் பலருடைய வாழ்க்கை தரம் மேம்பட்டு இருந்தாலும் இப்போதும் இந்த சீரியல் குறித்து 90's கிட்ஸ்கள் மட்டும் அல்லாமல் அவர்களுடைய அம்மா, அப்பாக்கள் கூட பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக இப்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் இயக்குனர் திருமுருகன் மீண்டும் மெட்டிஒலி சீசன் 2 எடுக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

இது அதிகமானோருக்கு ஹாப்பி நியூசாக தான் இருக்கும். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் அதுபோலவே இனி மெட்டிஒலி 2 சீரியலும் அதிகமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலுக்கான சூட்டிங் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அதுபோல இதுவும் உண்மையான செய்தி தானா? அல்லது பொய்யான செய்தியா? என்று பலருக்கு குழப்பமாக இருக்கும் நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் இரண்டு வாரத்திற்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications