அம்பிகா, ராதாவுக்கு 5 ஏக்கர் அரசு நிலம் கிஃப்ட் தந்தாரா எம்ஜிஆர்? மல்லிகா யார்? உடைத்து சொன்ன பிரபலம்
சென்னை: அக்கா தங்கை நடிகைகளான அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் அரசு நிலத்தை எம்ஜிஆர் தந்ததாக பலரும் சொல்லி வருகின்றனர்.. இது உண்மையா என ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சமீபத்தில் பதில் சொல்லியிருந்தார்.. இந்நிலையில், பத்திரிகையாளர் தேனி கண்ணன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் சித்ரா லட்சுமணன் தந்திருந்த விளக்கத்தை மீண்டும் தெரிவித்து, தெளிவுபடுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தந்திருந்த மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டியில், "நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு சென்னை போரூரில் எம்ஜிஆர் நிலத்தை வழங்கியிருந்தது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய ரகளையாகிவிட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன்.. இத்தனைக்கும் அம்பிகா, ராதா இருவருமே எம்ஜிஆருடன் ஒரு படத்திலும் நடிக்கவில்லை..

தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அரசு நிலத்தை தந்துவிட்டதாக மிகப்பெரிய விமர்சனம் கிளம்பியது.. அதிலும் படுத்த படுக்கையில், அவர்களை கூப்பிட்டு அந்த இடத்தை தந்திருந்தார்.. அதேபோல, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி இன்று உள்ளது.. 16 ஏக்கர் அரசு நிலத்தை அப்படியே தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதும், கெட்ட பெயராகிவிட்டது..
அரசு நிலத்தை நடிகைகளுக்கு தந்தாரா
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் என்ஜினியரிங் கல்லூரிகளை அனுமதி தந்து கட்ட வைத்தார் எம்ஜிஆர் என்றுதான் விமர்சனங்கள் பெருகின. ராமச்சந்திரா கல்லூரி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன.
பல நல்ல விஷயங்களை எம்ஜிஆர் செய்திருக்கிறார். ஆனால், வளர்ச்சி திட்டங்களைவிட கவர்ச்சியான உதவிகளையே அதிகம் செய்தார்.. இதைத்தானே சிஏஜி அறிக்கையாக தாக்கல் செய்தது" என்றெல்லாம் கூறியிருந்தார்.
அதேபோல, Channel 5 Tamil என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் தந்திருந்த பேட்டியில், "சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ போலவே, ஒரு ஸ்டுடியோவை சொந்தமாக கட்ட வேண்டும் என்று அம்பிகா, ராதாவின் நீண்ட நாள் ஆசையாகும்.. 1987-ல் எம்ஜிஆர் மரணமடையும் சூழலில் இருந்தார்..
5 ஏக்கர் அரசு நிலம்
தங்கள் கோரிக்கையை 2 நடிகைகளும், எம்ஜிஆரிடம் சொல்லவும், வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசை அழைத்து, ஏதாவது ஒரு நிலத்தை 99 வருஷத்துக்கு அவர்களுக்கு எழுதித்தந்துவிடுமாறு சொன்னார் எம்ஜிஆர்.. வளசரவாக்கம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்பட்ட இடத்தில்தான் ஏஆர்எஸ் ஸ்டுடியோ கட்டப்பட்டது.
அரசு நிலம் 99 வருஷத்துக்கு இலவசமாக இவர்களுக்கு தரப்பட்டது. செங்கல், சிமெண்ட், கம்பி, மொசைக் போன்ற அனைத்தும் மறைந்த தலைவர் மூப்பனாரால் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்துவதற்கு அம்பிகா, ராதாவை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மூப்பனார் அப்போது நினைத்தார்.. இதற்காக ராஜீவ் காந்தியிடமும், 2 நடிகைகளையும் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்து, தமிழகத்தில் இவர்களை வைத்து வாக்கு வங்கியை உயர்த்த முடியும் என்றும் நம்பிக்கை தந்திருந்தார்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
ஒன்னே முக்கால் ஏக்கர்
இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனும் ஒரு பேட்டியில் கூறும்போது, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இருவரும் ஏஆர்எஸ். கார்டனை வாங்கினார்கள். அப்போது அந்த இடத்தை எம்ஜிஆர் இலவசமாகக் கொடுத்து இருந்தால் அப்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா?
அதுவும் இல்லாமல் அந்த ஏஆர்எஸ் கார்டன் அரசு நிலமும் கிடையாது. அது தனியார் நிலம். அவர்களிடம் இருந்து தான் ராதா அந்த இடத்தை வாங்கினார். அந்த இடத்துக்குப் பக்கத்து இடம் பாரதிராஜாவுடையது. இருவரும் இணைந்துதான் அந்த இடத்தை வாங்கினார்கள். மேலும் இந்த இடம் ஒண்ணே முக்கால் ஏக்கர்தான் "என்று விளக்கம் தந்திருந்தார். இதற்கு பிறகே அந்த சலசலப்பு ஓரளவு ஓய்ந்தது.
இந்நிலையில், தேனி கண்ணன் ஒரு பேட்டி தந்துள்ளார்..1100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அம்பிகா, ராதாவுக்கு எம்ஜிஆர் தந்ததாக சொல்லப்படுவது குறித்து சித்ரா லட்சுமணன் சொன்ன கருத்துக்களையே மீண்டும் பதிவு செய்துள்ளார்.
மல்லிகாவுக்கு சொந்தம்
அதில், "எம்ஜிஆருக்கு அம்பிகா, ராதா மீது ஒரு பாசம் இருந்தது. இதனால், அரசியல் விழா நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பு உருவானது. இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால், அரசு நிலத்தை நடிகைகள் ராதா, அம்பிகாவுக்கு வாரி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே உள்ளது.. இது முற்றிலும் பொய் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்..
ஏஆர்எஸ் ஸ்டுடியோ அமைந்துள்ள நிலம் அரசு நிலமே கிடையாது. இது மல்லிகா என்ற தனிநபர் சொத்தாகும்.. 1984ல் எம்ஜிஆர், அந்த ஸ்டூடியோவினை திறந்து வைத்தார் என்பது தான் உண்மை. ஆனால், அரசு நிலத்தை நடிகைக்கு கொடுத்தார் என்பது சுத்த பொய்.
1000 கோடி மதிப்பு?
ஒரு சாதாரண விஷயத்திற்கே கலைஞர், சட்டசபையில் கேள்வி கேட்டபோது, நடிகைகளுக்கு அரசு நிலத்தை வழங்கியிருந்தால் சும்மா இருந்து இருப்பாரா? இதுபற்றி எதுவுமே தெரியாத பல யூடியூப் சேனல்கள் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோ நிலத்தை ராதா-அம்பிகாவுக்கு எம்ஜிஆர் கொடுத்ததாக தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
அந்த இடத்தின் நில வில்லங்கப் பத்திரங்களின்படி, அந்த நிலம், ராதாவின் அசல் பெயரான உதயச்சந்திரிகா பெயரில் உள்ளது. இப்போது அதன் மதிப்பு தோராயமாக 100 கோடி தான். ஆனால் 1000 கோடி என்று கதை கட்டி விடுகிறார்கள்" என்றெல்லாம் தேனி கண்ணன் பேசியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications