அம்பிகா, ராதாவை அழைத்து உதவி.. சென்னையின் புறநகர் அரசு நிலங்கள்? சசிகுமாருக்கு வாங்கிய ஏசி: பிரபலம்
சென்னை: "ஆட்சியில் இருந்தபோது, எம்ஜிஆர் அப்படியென்ன தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்? என் அண்ணன்தான் அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தார்.. வேலூரில் வெடிமருந்து தொழிற்சாலை, புகளூரில் காகித தொழிற்சாலை, இது இரண்டும்தான் 10 வருட ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் ஆகும். எத்தனையோ உதவிகளை எம்ஜிஆர் செய்திருந்தாலும், சில உதவிகள் விமர்சனத்துக்கும் ஆளாகின" என்று மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், "அம்பிகா, ராதாவுக்கு சென்னை போரூரில் எம்ஜிஆர் நிலத்தை வழங்கியது, பெரிய ரகளையாகிவிட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன்.. இத்தனைக்கும் அம்பிகா, ராதா இருவருமே எம்ஜிஆருடன் ஒரு படத்திலும் நடிக்கவில்லை.. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அரசு நிலத்தை தந்துவிட்டதாக மிகப்பெரிய விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது. அதிலும் படுத்த படுக்கையில், அவர்களை கூப்பிட்டு தந்தார்..

எம்ஜிஆர் ஜானகி கல்லூரி இன்று உள்ளது.. 16 ஏக்கர் அரசு நிலத்தை அப்படியே தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதும், கெட்ட பெயராகிவிட்டது.. போரூர் ஏரியை அப்போது இரட்டை ஏரி என்பார்கள்.. அந்த போரூர் ஏரியின் ஒரு பகுதி, ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியாக போய்விட்டது.
சென்னை ஏரிகளில் கல்லூரிகள்
ஜேப்பியார் கல்லூரியும் ஒரு ஏரியில்தான் கட்டப்பட்டது.. ஏசி சண்முகம் கல்லூரி கூவம் நதியிலேயே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் கட்டியது எல்லாமே ஏரிகள்.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் என்ஜினியரிங் கல்லூரிகளை அனுமதி தந்து கட்ட வைத்தார் எம்ஜிஆர் என்றுதான் விமர்சனங்கள் பெருகின. ராமச்சந்திரா கல்லூரி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன.
பல நல்ல விஷயங்களை எம்ஜிஆர் செய்திருக்கிறார். ஆனால், வளர்ச்சி திட்டங்களைவிட கவர்ச்சியான உதவிகளையே அதிகம் செய்தார்.. இதைத்தானே சிஏஜி அறிக்கையாக தாக்கல் செய்தது. பெரும்பாலும் பப்ளிசிட்டிக்கான உதவிகளை செய்தார். அதிலும் தனிப்பட்ட நபருக்காக செய்தார்.
தீயில் வெந்த சசிகுமார்
உதாரணத்துக்கு அன்று சசிகுமார் என்ற நடிகர் இருந்தார்.. எம்ஜிஆருடன் இணைந்து அவ்வளவாக நடிக்காதவர்.. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் ஒருநாள் சண்டை வந்துள்ளது.. அந்த தகராறு முற்றிய நிலையில், மனைவி தனக்குதானே நெருப்பு வைத்து கொளுத்தி கொண்டார்.. இதை பார்த்து பதறிய சசிகுமார், ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முயன்றார்.. ஆனால், அவருக்கும் தீப்பிடித்துவிட்டது. இதனால் இருவருமே ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீக்காயத்துக்கென்று தனி வார்டு அங்கு கிடையாது. எனவே, தீக்காயத்துக்கு ஏர்கண்டிஷன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லவும், 2 AC வாங்கி ராயப்பேட்டை மருத்துவமனையில் இறக்கினார் எம்ஜிஆர்.. ஆட்சிக்கு வந்த பிறகு, தீக்காயத்துக்கு தனி வார்டை அவர் உருவாக்கியிருக்கலாமே? ஆனால் செய்யவில்லை.
தமிழகத்தின் தொழிற்சாலைகள்
தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உதவி செய்தார்.. நடிகை ராஜசுலோசனாவுக்கு 10 லட்சம் அழைத்து தந்தார்.. பாரதிராஜாவுக்கு 15 லட்சம். ஆனால், இதெல்லாம் அவருடைய சொந்த பணம்.
ஆட்சியில் இருந்தபோது, அப்படியென்ன தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்? என் அண்ணன்தான் அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தார்.. வேலூரில் வெடிமருந்து தொழிற்சாலை, புகளூரில் காகித தொழிற்சாலை, இது இரண்டும்தான் 10 வருட ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் ஆகும். எத்தனையோ உதவிகளை எம்ஜிஆர் செய்திருந்தாலும், சில உதவிகள் விமர்சனத்துக்கும் ஆளாகின" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications