Middle Class Review: 'மிடில் கிளாஸ்' படம் ஹிட்! ஒரேயொரு செக் காணாம போனா என்னாகும்? கதை இதுதான்!
சென்னை: நடிகர் முனீஸ் காந்த் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் 'மிடில் கிளாஸ்' படத்தோட விமர்சனம் பற்றித்தான் இப்போ பார்க்கப் போறோம். படத்தோட தலைப்பைப் பார்த்தாலே நம்ம வாழ்க்கைதான் அதுன்னு புரியும். இந்த படத்தை பார்த்த பலரும் சோசியல் மீடியாவில் ஆகா ஓகோ என்று பாராட்டி வருகின்றனர் அடுத்த டூரிஸ்ட் பேமிலி படம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள் சரி இந்த படத்தின் கதை என்னன்னு பார்க்கலாம்.

படத்தோட பின்னணி
இந்த படத்தை டிஇவி மற்றும் கேவி துரை இணைந்து தயாரிச்சிருக்காங்க. எழுத்தாளரும், இயக்குநருமான கிஷோர் முத்துராமலிங்கம் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். முனிஷ்காந்த் தான் படத்தோட நாயகன். அவருடன் விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரோஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு, சான் லோகேஷ் படத்தொகுப்பு, பிரணவ் முனிராஜ் இசையமைச்சிருக்கார்.
மிடில் கிளாஸ் போராட்டம்
சென்னையில் குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து குடும்பத்தை நடத்திட்டு வர்றார் முனிஷ்காந்த். அவரோட பெரிய கனவு, சொந்த ஊர்ல ஒரு நிலம் வாங்கிச் செட்டிலாகணும். ஆனா அவருடைய மனைவி விஜயலட்சுமிக்கோ, சென்னையிலேயே சொந்த வீடு வாங்கணும் ங்கிறதுதான் ஆசை. குழந்தைகளோட தேவைகள், வீட்டுச் செலவுகள்னு தினமும் திண்டாடிக்கிட்டு இருக்கிற இந்தக் குடும்பத்தோட வாழ்க்கையில திடீர்னு 1 கோடி மதிப்புள்ள செக் கிடைக்குது.
காணாமல் போன செக்
அந்தக் செக் கிடைச்சிருச்சுங்கிற நம்பிக்கையில கடன் வாங்கிக் பல செலவுகளை தொடங்கிடுறாங்க. ஆனா அந்தக் செக் திடீர்னு தொலைஞ்சுபோக, அவங்களோட வாழ்க்கையில ஏற்படுற மாற்றங்கள்தான் இந்தப் படத்தோட முக்கியக் கரு. ஆரம்பத்துலேயே இருந்து பின்னிப் பெடலெடுத்திருக்கார் இயக்குநர்.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் ஒரு சாதாரணக் குடும்பத்தோட போராட்டங்களையும், கனவுகளையும் ரொம்ப இயல்பாவும், லேசான நகைச்சுவையோடவும் சொல்லியிருப்பது இந்தப் படத்துக்குப் பெரிய பலம். இறுதிச் சண்டை, அதுல சொல்லவர்ற கருத்து ரொம்பப் பாராட்டக் கூடியதா இருக்கு.
படத்தோட விளம்பரத்துக்காகப் படக்குழு ஊர் ஊராகச் சென்று விளம்பரம் செஞ்சாங்க. இப்போவரைக்கும் இந்தப் படத்துக்குப் பாசிட்டிவான வரவேற்புதான் வந்துட்டு இருக்கு. சமூக வலைதளப் பக்கங்கள்ல படத்தைப் பார்த்தவங்க எல்லாரும் நல்ல விமர்சனங்களையே பதிவிட்டு வர்றாங்க. படத்துல அமைஞ்ச பாடல்கள், நடிப்பு, கதை எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நல்ல காட்சிகள், அப்பப்போ சிரிப்புக்குக் குறைவில்லாத காமெடின்னு ஒரு மகிழ்ச்சியான படமா உருவாகியிருக்கு. இந்த வருஷம் வெளியான படங்கள்ல 'மிடில் கிளாஸ்' படம் கதையிலயும் சரி, பட்ஜெட்லேயும் சரி அசத்தியிருக்கு.
அசத்திய நடிகர்கள்
மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனா முனிஷ்காந்த், ரொம்ப அழகா, இயல்பா நடிச்சிருக்கார். மாசச் செலவுகளைக் கணக்குப் பார்த்து கவலைப்படுவது முதல், குழந்தைகள் கேட்கிறதைக் கொடுக்க முடியாமப் படுற வேதனை வரைக்கும் எல்லாத்தையும் உணர்வோட வெளிப்படுத்தியிருக்கார் வாழ்க்கையில் முன்னேறணுங்கிற கனவோட இருக்கிற மனைவியா விஜயலட்சுமி அசத்தியிருக்காங்க. குறிப்பா இரண்டாம் பகுதியில அவங்களோட நடிப்பு ரொம்பச் சிறப்பா இருக்கு.
ராதாரவிக்கும் இந்தப் படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரம் அமைஞ்சிருக்கு. இந்தப் படத்தைப் பார்த்துட்டு வரும்போது ஒரு விதமான பாசிட்டிவ் உணர்வு கிடைக்கும். குடும்பத்தோட படத்தைப் பாருங்க, இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுத்து, சொல்ல வரும் கருத்துகள் எல்லாமே பக்கா. முனிஷ்காந்தும் விஜயலட்சுமியும் ஒரு முழுமையான வெற்றியாளர்கள். படத்தோட முதல் பாதி ரொம்பக் காமெடியா இருக்கு. இரண்டாம் பகுதியில ஒரு கண்ணியமான உணர்ச்சியோட கூடிய கருத்தைச் சொல்லியிருக்காங்க. கிளைமாக்ஸ்ல நம் கண்கள்ல கண்ணீர் வரவழைச்சுட்டாரு இயக்குநர் கிஷோர்.
மொத்தத்தில், 'மிடில் கிளாஸ்' - ஜாலியா ஒருமுறை ரசிக்கலாம் மற்றும் குடும்பத்தோட பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications