சில்க் ஸ்மிதா ரொம்பவே பாவம்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை நானே பார்த்தேன்! மைக் மோகன் ஓப்பன் அப்
சென்னை: நடிகர் மைக் மோகன் பல வருடங்களுக்கு பிறகு ஹரா திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மைக் மோகன் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு பல ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சில்க் ஸ்மிதா 80ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இப்போதும் கூட சில்க் என்ற பெயரை கேட்டதுமே ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணி வருவதாக பீல் பண்ணுவார்கள். அவருடைய மயக்கும் கண்கள் மற்றும் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதே நேரத்தில் சில்குடன் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கூறி வருகிறார்கள்.

சில்க் சுமிதாவைப் போல் யாராலும் தங்களுடைய மேக்கப் மற்றும் உடை அலங்காரத்தில் கவனம் செலுத்த முடியாது என்று அவரோடு நடித்த நடிகைகளே அவரை குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் மைக் மோகன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது சில்க் சுமிதா குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், சில்க் அவர் நடிக்கும் கேரக்டர் மாதிரி கிடையாது. சினிமாவில் வேணும்னா அவர் கிளாமராக நடிக்கலாம். ஆனால் அவர் ரொம்பவே நல்ல பொண்ணு. ஆரம்பத்தில் இருந்து சில்க் பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் ஜெயித்திருக்காங்க. அதனால அவங்க எல்லோரிடமும் ரொம்ப பாசமா தான் பேசுவாங்க. எனக்கு அவங்கள நல்லாவே தெரியும். நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் இருக்கிறேன்.
அந்த அளவிற்கு அவர் இரண்டிலும் அவ்வளவு வித்தியாசத்தை காட்டுவார். சில்க் ரொம்ப ரொம்ப நல்லவங்க.. எனக்கு ஒரு விஷயம் கூட ஞாபகம் இருக்கு, சில்க் ஸ்மிதா ஷூட்டிங் என்றாலே சூட்டிங் பார்ப்பதற்காக அத்தனை பேரு வருவாங்க. ரசிகர்கள் மட்டுமல்ல ப்ரொடியூசரில் இருந்து பைனான்ஸ்காரங்க வரைக்கும் அவ்வளவு பேரும் காத்து இருப்பாங்க.
ஆனா எந்த இடத்திலும் சில்க் அலட்டிக்கவே மாட்டாங்க. ரொம்ப ரொம்ப நார்மலா பழகிட்டு இருப்பாங்க. சூட்டிங் ஸ்பாட்டில் கூட அங்கு இருக்கிற எல்லாரிடமும் சகஜமா பழகுவாங்க. அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே ரொம்ப கஷ்டம் தான். எனக்கும் அவங்க இல்லை என்பதை இப்பவும் ஏற்றுக்கொள்ள கஷ்டமா தான் இருக்கு என்று நடிகை சில்க் ஸ்மிதா பற்றி மோகன் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் மோகன் "ஹரா" திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு இவருடைய நடிப்பை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் விளம்பரத்திற்காக பல நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக மோகன் கலந்து கொண்டிருக்கிறார்.
இத்தனை நாட்களாக இவர் கேமரா முன்னாடி வராமல் இருந்த நிலையில் இப்போது வெள்ளிதிரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பாக டான்ஸ் ஆடி, பாட்டு பாடி அசத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications