குக் வித் கோமாளிக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகு வாழ்க்கையே விரக்தி ஆயிடுச்சு.. மைம் கோபி வருத்தம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஜெயித்த மைம் கோபி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த பிறகு தன்னுடைய வாழ்க்கையே விரக்தி அடைந்தது போல இருந்தது என்று உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பெரிய அளவில் பெயர் வாங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் டைட்டில் வின்னரான மைம் கோபி ஏற்கனவே விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் முதல் பாகத்தில் சரவணனை ஏமாற்றும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு சினிமாக்களில் நடிக்க தொடங்கி இப்போது சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராகவும் இருந்து வருகிறார் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் நான்காவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு தன்னுடைய முயற்சி மற்றும் உழைப்பு காரணமாக வெற்றியும் பெற்று டைட்டில் ஜெயித்துவிட்டார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சி பற்றி முதல் முறையாக இப்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
அதில் மைம் கோபி பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமான நாட்கள் என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் சொல்வேன். ஏதாவது ப்ரோக்ராமில் கலந்து கொண்டு டென்ஷனாக இருந்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் எல்லா டென்ஷனும் போய்விடும். என்னுடைய வாழ்க்கையில் சொர்க்கம் என்றாலும் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான் சொல்லுவேன், நரகம் என்றாலும் அந்த நிகழ்ச்சியை தான் சொல்லுவேன்.
காரணம் கோமாளிகள் சில நேரங்களில் பாடாய்படுத்துவார்கள். ஆனாலும் அதுவும் ரொம்பவும் நன்றாக இருக்கும். நம்முடைய கஷ்டங்கள் மறந்து போகும் இடம் அந்த இடம்தான். அந்த நிகழ்ச்சிக்கு நான் போகும்போது காலையில் உள்ளே போகும்போது எல்லோரிடமும் வணக்கம் சொல்லிவிட்டு பேச தொடங்கி விடுவேன் அங்கிருந்த லைட் மேன் முதல் துடைக்கிறவங்க வரை எல்லோருமே கலகலப்பாக இருப்பார்கள்.
அதுபோல ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் இருப்பார்கள். நான் செய்யும் சாப்பாடு எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் சமைங்க மைம் அண்ணா என்று சொல்வார்கள். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு சில வாரங்கள் எனக்கு ரொம்பவும் டிப்ரசனாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் விரக்தி அடைஞ்சேன் என்று தான் சொல்ல வேண்டும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முடிவால் என்னுடைய கேரக்டர் சில வாரங்களில் ரொம்பவே மாறியது எனக்கே தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் அவ்வளவு அழகாக அறிவுரை சொல்லுவார். அப்பா தாமுவே சொல்லவே வேண்டாம் அவரும் சப்போர்ட் பண்ணுவார். கோமாளிகளும் நம்முடைய மனநிலையை அறிந்து கலகலப்பாக மாற்றி விடுவார்கள். நான் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது என்னுடைய வாழ்க்கையில் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் மகிழ்ச்சியான தருணம் என்று அந்த பேட்டியில் மைம் கோபி பேசியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications