CWC பற்றிய ரகசியத்தை உடைத்த மைன் கோபி.. சமையலே தெரியாமல்.. வெற்றி பெற்றது இப்படித்தானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.
இதில் வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியும் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும் மைம் கோபி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதில் தனக்கு சமையலே தெரியாமல் இருந்த நிலையில் தான் எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் எப்படி வெற்றி பெற்றேன் என்றும் பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு சீசன் முடியும் போதும் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது நான்காவது சீசன் முடிவடைந்து இருக்கிறது.
இந்த சீசனில் டைட்டில் வின்னராக மைன் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்து சிவாங்கி தான் வெற்றியாளர் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் மைன் கோபி வெற்றி பெற்றதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைம் கோபி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் இந்த நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் மைம் கோபிக்கு சமையல் கொஞ்சம் கூட தெரியாதாம். அவர் அதிகபட்சமாக கபசுர நீர் மட்டும் வைத்திருக்கிறாராம். மற்றபடி அவருக்கு எதுவுமே தெரியாத நிலையில் சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு திடீரென்று விஜய் டிவி தரப்பில் இருந்து போன் போட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இவருக்கே அதிர்ச்சியாக இருந்ததால் என்ன தகுதியில் நம்மை இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று இவரே நினைத்திருக்கிறார்.
பிறகு தன்னுடைய நண்பர்கள் சிலரிடமும் இது பற்றி பேச அனைவரும் இதில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில்தான் நடிகர் சந்தோஷை இவர் சந்தித்து இருக்கிறார். அப்போது சந்தோஷியிடம் இது பற்றி பேச சந்தோஷ் கண்டிப்பா நீங்க இதில் கலந்து கொள்ள வேண்டும். எனக்கு பெரிய அளவில் என்னுடைய திறமையை வெளியே கொண்டு வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
நீங்கள் ஒரு நடிகராக மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உங்களுடைய நிஜ கேரக்டர் உங்களுக்குள் இருக்கும் மைம் திறமை எதுவுமே யாருக்கும் தெரியாது. அதனால் கண்டிப்பாக நீங்கள் இதில் சேர வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். பிறகு சரி என்று மைம் கோபி நினைத்தாலும் தனக்கு எதுவுமே சமைக்க தெரியாதே என்று நினைத்திருந்த நேரில் தன்னுடைய நண்பர் ஒருவர் ஹோட்டல் வைத்திருக்கும் நிலையில் அவரிடம் பேசி இருக்கிறார்.
அவருடைய மனைவி அப்போது மூன்று மாதமாக கர்ப்பமாக இருந்தாராம். அந்த நிலையிலும் நான் உங்களுக்கு சமையல் சொல்லி தரேன் அண்ணா என்று சொல்லி எல்லாவிதமான சமையல்களும் அவர்தான் கர்ப்பமாக இருந்த நேரத்திலும் மைம் கோபிக்கு சொல்லிக் கொடுத்தாராம். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து விட்டதாம். ஆனாலும் கடைசி வாரம் வரைக்கும் அவர்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

மைம் கோபியின் நண்பர் ஹோட்டல் வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளும் செய்து கொண்டிருக்கிறாராம் அவருக்கு தான் மைம் கோபி தான் ஜெயித்த ஐந்து லட்சம் பணத்தையும் கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் முன்னமே சொல்லி அவர்களை அந்த சமையலை ட்ரைனிங் எடுத்துவிட்டு வர சொல்லி விடுவார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் அதுவெல்லாம் கிடையாதாம். மொத்தமாக தான் நாங்கள் ட்ரைனிங் எடுத்துக் கொள்வோம். இந்தியன் உணவகத்தில் கொஞ்சமும், சைனீஸ் உணவகத்தில் கொஞ்சம் என விதவிதமாக சமையல் செய்து கற்றுக் கொண்டு வருவோம் என்று கூறி இருக்கிறார்.
அதுபோல எனக்கு புதியதாக எந்த உணவையும் சமைக்க தெரியாது. அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே இங்கே வந்து செய்து முடித்து விடுவேன் என்றும் மைம் கோபி கூறி இருக்கிறார். அதுபோல நான் எலிமினேட் ஆகியிருந்தால் செத்தா போக போறேன் என்று பெரியதாக எடுத்து இருக்க மாட்டேன். ஒவ்வொரு வாரமும் டாஸ்க் நேரத்தில் டென்ஷனாக தான் இருக்கும். நாம சிறப்பா செய்யனும் என்று அப்படி பதட்டத்தோடு தான் கடைசி வாரம் வரைக்கும் இருந்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications