சன் டிவியில் அந்த ஹிட் சீரியலில் நடித்தது நான் தான்.. தயாநிதிமாறன் திட்டினார்! அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன்
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சன் டிவியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலில் தான் நடித்த போது நடந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தான் நடித்த காட்சிகள் அந்த சீரியலின் இன்ட்ரொடக்சன் காட்சியில் தினமும் வரும்போது தயாநிதி மாறன் திட்டியது குறித்தும் அன்பில் மகேஷ் பேசியிருக்கிறார்.
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், அமைச்சராகவும் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒரு நபராக இருக்கிறார். உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக மாறி இருந்தார். நடிகர் விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஏழாம் அறிவு, அதுபோல கமல்ஹாசன் நடித்த மன்மதன் அன்பு போற்ற படங்களை உதயநிதி தயாரித்து இருந்தார்.

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்
அதற்கு பிறகு தான் அவருக்கு கதாநாயகனாக மாற வேண்டும் என்று ஆசை வந்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக அவர் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய ஹிட் கொடுத்ததும் அவர்கள் முழு நேரமாக ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார்.
அரசியலில் அறிமுகம்
சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது நான் அரசியல் பக்கம் தலை காட்டவே மாட்டேன் என்று சொன்ன உதயநிதி சில வருடங்களுக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இப்போது துணை முதல்வர்
தற்போது விளையாட்டு துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை போலவே அவருடைய அப்பா ஸ்டாலினும் ஆரம்பத்தில் சினிமா, சீரியல் என்று நடித்துவிட்டு பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு இப்போது முதல்வராக இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் நண்பர்
அதேபோல உதயநிதி ஸ்டாலினின் நண்பரான அன்பில் மகேஷ் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து இப்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் இருவருமே சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். அந்த நட்பு இன்று வரை தொடர்கிறது. உதயநிதி சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அவருடைய நண்பர் அன்பில் மகேஷ் சீரியலில் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிறகு அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகல்யா சீரியல்
அன்பில் மகேஷ் சன் டிவி சீரியலில் தான் நடித்திருக்கிறார். சன் டிவியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா என்ற சீரியலில் நல்ல முத்து என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த சீரியலில் அன்பில் மகேஷ் ஒரே ஒரு கட்சியில்தான் வருவாராம்.
தயாநிதி மாறன் சொன்ன வார்த்தை
அதுவும் ஒரு வீல்சேரில் உட்கார்ந்து சுற்றியபடியே ஹலோ என்று சொல்லும் காட்சி மட்டும் தானாம். ஆனால் அந்த சீரியலில் தினமும் போடப்படும் பாடலில் அன்பில் மகேஷ் காட்சிகளும் இடம் பிடித்திருந்ததாம். இதனால் தயாநிதி மாறன் உன்னுடைய நண்பன் என்பதால் அன்பில் மகேஷ் காட்சியை மட்டும் தினமும் போடுவியா? அவன் நடிச்சதே ஒரே ஒரு காட்சி அதை தினமும் வரணுமா என்று கலாய்ச்சார் என்று அந்த பேட்டியில் அன்பில் மகேஷ் பேசி இருக்கிறார். அதுபோல அந்த சீரியலில் இன்ட்ரோ பாடலுக்கு இசை அமைத்தது டி இமான் தானாம்.












Click it and Unblock the Notifications