சூப்பர் சிங்கரில் என் பொண்ணு! பெருமையாய் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10வது சீசனில் கலந்து கொண்ட நஸ்ரின் என்ற மாணவி பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசன் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயது உட்பட்ட பாடல் திறமை உள்ள பல குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள்.

அதுபோல இந்த நிகழ்ச்சியில் டி இமான், கே எஸ் சித்ரா மற்றும் பாடகர் மனோ என மூன்று பேரும் நடுவர்களாக இருக்கிறார்கள். வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் தான் ஆகிறது. அதற்குள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில குழந்தைகள் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் வரும் நவம்பர் 23ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நஸ்ரின் என்ற குழந்தை பாட்டு பாடி எல்லோரையும் மனம் லயிக்க வைத்திருக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் அந்த மாணவி இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் கலந்து கொண்டு தேர்வானார்.

அரசு பள்ளி குழந்தை பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பலர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த மாணவி நஸ்ரின் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
அதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அந்த குழந்தைக்கு பாராட்டி அன்பில் மகேஷ் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அதோடு எங்க பிள்ளை செலக்ட் ஆனது எங்களுக்கு ரொம்ப பெருமை. அந்தப் பிள்ளை இவ்வளவு பிரபலமானதற்கு காரணமாக இருந்த எலிசபெத் டீச்சரை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு உத்வேகத்தோடு அந்த பிள்ளைகளை வளர்த்து வர்றாங்க என்று சொல்லி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எலிசபெத் டீச்சர் பேசுகிறார். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று சந்தோஷமாக சொல்ல அதைக் கேட்டு பாடகி சித்ரா உங்க நல்ல மனசுக்காக என்று அந்த குழந்தைக்கு கோல்டன் ஷவர் கொடுத்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications