ஆரம்பமே இப்படியா? ஒரு வாரமாக அண்ணா சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் செய்த செயல்..!
சென்னை: விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா சீரியலுக்காக நடிகர் மிர்ச்சி செந்தில் கடுமையாக விரதம் இருந்து இருக்கிறாராம்.
ஒரு ப்ரோமோ காட்சியில் நடிப்பதற்காக மிர்ச்சி செந்தில் செய்த செயல் பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.
ப்ரோமோவில் ஆரம்பத்திலேயே அலகு குத்தி பக்தியாக வந்த மிர்ச்சி செந்திலை பலர் கலாய்த்த நிலையில் தற்போது பல தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

ஒரு விஜேவாக இருந்த மிர்ச்சி செந்தில் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தார். இந்த சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருடைய பாராட்டை பெற்றிருந்தது. முதல் சீரியலில் இவரோடு நடித்த கதாநாயகி ஸ்ரீஜாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களிலும் நடித்து வந்த இவர் தன்னுடைய மனைவியோடு மாப்பிள்ளை என்ற சீரியலிலும் மீண்டும் நடித்திருந்தார். அதுபோல அவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து முடித்து இருந்தார். அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா சீரியலில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் ப்ரோமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருந்தது. இந்த ப்ரோமோவை பலரும் பாராட்டியிருந்தனர். பலர் கலாய்த்து இருந்தனர்.

காரணம் நான்கு தங்கைகளின் அண்ணனாக இருக்கும் மிர்ச்சி செந்தில் அந்தப் ப்ரோமோவில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமி ஆடியது தான். அது பலரையும் பக்தியில் பரவசத்தில் ஆழ்த்தியது என்று கூறி வந்தனர். ஆனால் இந்த ப்ரோமோ காட்சியில் நடிப்பதற்காக அவர் ஒரு வாரம் கடுமையான விரதம் இருந்து நடித்திருக்கிறாராம்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த சீரியலுக்கான போட்டோ சூட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோ சூட்டுக்காகவும் அவர் மூன்று நாட்கள் விரதம் இருந்திருக்கிறார். அவர் நிஜ வாழ்க்கையை போலவே இந்த சீரியலிலும் முருக பக்தர் என்பதால் விரகதம் இருந்து சீரியலுக்காக பல வேலைகளை தொடங்கியதாக தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
