வாங்கிய பணத்துக்கு அந்த பாட்டையாவது? அரைச்ச மாவு தக் லைப்பை வச்சு செய்வாங்க! சிம்பு சிறப்பு: பிரபலம்
சென்னை: தக் லைஃப் படம் இன்று வெளிவந்துள்ளது. கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான இந்த படத்தில், முதல் முறையாக சிம்பு கமலுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனங்கள் வெளியாகி பரபரப்பை தந்து வருகின்றன. அந்த வகையில், மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "படத்தில் லாஜிக் மிஸ் நிறைய இருக்கு.. ஒன்றரை மணி நேரம் ஓடினதே, 3 மணி நேரம் படம் போல இருக்கு.. படத்தில் எதிர்பார்க்கப்பட்டது முத்த மழை, விண்வெளி நாயகா என்ற இரு பாடலும்தான். இரண்டையுமே காணோம்.. விண்வெளி நாயகா பாட்டை கடைசி டைட்டிலில் ரன்னிங்கில் போட்டுள்ளார்கள்..

லாஜிக் மிஸ்ஸிங்
எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றிகரமாக இல்லை.. ஆனால், கமல்ஹாசன் இந்த வயதிலும், கடுமையாக உழைத்துள்ளார்.. இந்த வயதில் இந்த அளவுக்கு யாராது ஆக்டிவ்வாக இருப்பார்களா தெரியவில்லை.. ஆனாலும், கதை வேணும், லாஜிக் வேணும், ஸ்கிரிப்ட்ட வேணும்.. இது எதுவுமே படத்தில் இல்லை..
மணிரத்னத்துக்கு என்ன ஆச்சு? என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.. இன்றைய இளம் டைரக்டர்களை போல தானும் அப்படி செய்ய வேண்டும் என்பது போலவே இந்த படத்தை எடுத்திருக்கிறாரோ? என்று தோன்றுகிறது.. மணிரத்னம் தன்னுடைய இடத்திலிருந்து சற்று இறங்கி வந்ததுபோல தெரிகிறது.
வீணடிக்கப்பட்ட நட்சத்திரங்கள்
இந்த படம் மொத்தமாகவே பேக் ஃபயர் ஆகிவிட்டது. ஐஸ்வர்யா லட்சுமி, தன் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்.. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஜோஜு ஜார்ஜை, ரெட்ரோ போல இந்த படத்திலும் வீணடித்திருக்கிறார்கள்.. படம் நீளமாகவும், வறட்சியாகவும் இருக்கிறது.. சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது.. ஆனால் 3 அல்லது 4 சண்டை பார்க்கலாம்.. படம் முழுக்க சண்டை என்றால் எப்படி பார்ப்பது?
படம் மனதில் ஒட்டவில்லை.. கமலை அடித்து துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு, பனிமலையிலிருந்து தூக்கி எறிகிறார்கள்.. ஆனால், போதி தர்மன் போல எழுந்து நின்ற கமல், தன் உடலிலிருந்து அந்த புல்லட்டை வெறும் கையாலேயே எடுத்துவிடுகிறார்.. இப்படி படம் முழுக்க நிறைய சீன் இருக்கு.. இந்தியன் 2 போல, இந்த படத்தையும் வச்சு செய்ய போறாங்க போல..
ரஹ்மான் ரீ ரெக்கார்டிங்
எங்கெங்கோ படம் போகிறது.. அப்படி தறிகெட்டு ஓடும் படத்தை, ஒரே கட்டுக்குள் கொண்டு வந்த ஒரே நபர் ரஹ்மான்தான்.. ரீ-ரெக்கார்டிங் போட்டு, தியேட்டரில் தூங்கி கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்பி விட்டுக் கொண்டேயிருக்கிறார்.. ஏதோ டுவிஸ்ட் வரப்போகிறது போல என எதிர்பார்த்து கொண்டேயிருந்தால், கடைசியில் படம் முடிந்துவிட்டது..
ரெக்கார்ட் செய்யப்பட்ட பாட்டையாவது படத்தில் வைத்திருந்தால் டிக்கெட் வாங்கின காசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்.. முத்த மழை பாட்டை யாருக்காக எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. திரிஷா-சிம்பு வைத்தாவது அந்த பாட்டை எடுத்திருக்கலாம்.. மொத்தத்தில் இந்த படத்தின் பாடல்கள் சின்மயிக்கும், டிவி விவாதத்துக்கும்தான் பயன்பட்டது..
சிறப்பாக நடித்திருக்கும் சிம்பு
சிம்பு நல்லாவே நடிச்சிருக்கார்.. பெரிய எஃபெக்ட் போட்டுள்ளார்.. இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு கம்பேக் தான்.. சண்டைகளையும் நன்றாகவே செய்திருக்கிறார்.. ஆனாலும் அதுக்குகூட ஒரு கதை வேணும்தானே? லாஜிக் வேணும்தானே? ஹெலிகாப்டர் , துப்பாக்கிக்கு செலவு செய்திருக்கிறார்கள்..
சண்டைக்காட்சிக்கு, CG வேலை என டெக்னிக்கலாக படம் நல்லா இருக்கு.. ஆனால், கதைதான் இல்லை.. இவ்வளவு நீளமான படம் தேவையேயில்லை.. அதிர்ச்சியில் தியேட்டரே நிசப்தமாக உள்ளது..
ரசிப்புத்தன்மை மாறிவிட்டது
செல்வாக்கை வைத்து படம் ஓட்டிவிடலாம், பிரம்மாண்டத்தை காட்டி படம் ஓட்டிவிடலாம், பாட்டை வைத்து படம் ஓட்டிவிடலாம் என்பதெல்லாம் இனி நடக்காது.. கதையை கவனிக்கிறார்கள் மக்கள்.. உலக சினிமாவை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. மக்களின் ரசிப்புத்தன்மையே மாறிவிட்டது.. இன்னமும் அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருந்தால் எப்படி? அடுத்து வரக்கூடிய தலைமுறையினர் இதை கவனிப்பார்கள் என்றே நினைக்கிறேன்..
கமல்ஹாசன், மணிரத்னம் இவர்கள் எல்லாம் பெரிய லெஜண்ட்ஸ்.. இவர்கள் தங்களது சொந்த பாணியிலேயே படம் எடுத்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.. அதைவிட்டுவிட்டு, இப்போதுள்ள டிரெண்டு இதுதான் என்று நினைத்துக்கொண்டு, இப்படியொரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications