புருஷன் லட்சணம் இதுதான்! அழகு, கம்பீரம் இல்ல.. மொத ராத்திரி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சொல்லும் பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ஆணை பார்த்ததும் அவரை ஆல்ஃபா என்று சொல்ல என்னென்ன விஷயங்களை அளவுகோலாக வைக்கிறோம்? அழகு இருக்கணும், உயரம் இருக்கணும், நல்ல குரல் இருக்கணும், கம்பீரமாக இருக்கணும், அறிவு இருக்கணும், தன்னம்பிக்கை இருக்கணும், தலைமைப் பண்பு இருக்கணும் என்று ஆயிரம் விஷயங்களை பட்டியல் போடலாம். ஆனா இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கு. அதுதான் பொறுப்புணர்வு.

நம்ம பிரச்சனைன்னு போய் நிக்கும்போது, "நான் இருக்கேன்... எது வந்தாலும் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அந்த வார்த்தையை செயலில் காட்டுற ஆண்தான் உண்மையிலேயே பெரிய ஆள். இந்த விஷயத்தை ரொம்ப அழகாக இரண்டு வெவ்வேறு கதைகள் சொல்லியிருக்கிறது. ஒன்று மொத ராத்திரி. இன்னொன்று விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

"மொத ராத்திரி"யில் ஒரு வித்தியாசமான திருமணத்தைச் சுற்றி ஒரே இரவில் நடக்கும் பல குழப்பங்கள்தான் கதை. திருமணம் முடிந்ததும் வாழ்க்கை எல்லாம் சுலபமாகிவிடும் என்று நினைக்கிற நேரத்தில், அந்த முதல் இரவே எதிர்பாராத பிரச்சனைகளால் சிக்கலாகிறது. ஆனா அந்தக் கதைக்குள் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு, "இவன் என்ன ஆனாலும் என்னை விட்டுட மாட்டான்" என்ற நம்பிக்கையை ஒரு ஆண் கொடுக்கிறான் என்றால், அதுதான் காதலின் உண்மையான அடித்தளம்.

Review social media movie

2 ஹீரோக்களின் ஒற்றுமை

அதே மாதிரி "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்திலும் சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தை எடுத்துக்கிட்டா, வெளியில் பார்க்கிறதுக்கு கம்பீரமான, வசதியான, தன்னம்பிக்கை கொண்ட ஒரு ஆண். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் உண்மையான பலம் அவனுடைய தோற்றத்துல இல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகளில்தான் இருக்கு.

குழந்தைக்கு பிரச்சனை வரும்போது அதை சரி செய்ய ஓடுவது, குடும்பத்துக்காக முடிவுகளை எடுப்பது, தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் யோசிப்பது என்று கதை அவனை வெறும் ஹீரோவாக மட்டும் காட்டாமல், பொறுப்பை சுமக்கிற ஒரு ஆணாக காட்டுகிறது. அதனால்தான் மேடிக்கு சஞ்சய் மேல காதல் வருவதையும், ஒரு பெண் ஒரு ஆண் மேல நம்பிக்கை வைப்பதையும் வெறும் "ஹீரோ அழகா இருக்காரு... கம்பீரமா இருக்காரு" என்று மட்டும் பார்க்க முடியாது.

Review social media movie

எப்போதும் சப்போர்ட் தேவை

அதே விஷயம்தான் நிஜ வாழ்க்கையிலும். நீ தப்பு பண்ணியிருந்தாலும் நான் உன் பக்கம் நிற்பேன். பிரச்சனை வந்துடுச்சுன்னா நீ தனியா சமாளிக்க வேண்டியதில்லை."என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்." இந்த மாதிரி வார்த்தைகள் சொல்லுறது ரொம்ப சுலபம். ஆனால் அந்த வார்த்தையை காப்பாற்றுவதுதான் கஷ்டம்.

ஒரு பெண் தன்னுடைய கஷ்டத்தை சொல்லும்போது, உடனே தீர்ப்பு சொல்லாமல் பொறுமையாகக் கேட்பது... அவளுக்கு என்ன தேவை என்பதை புரிஞ்சிக்கிறது... அவளுடைய பிரச்சனை பெரிய மலையாக இருந்தாலும், "சரி, முதல்ல இதை எப்படி சமாளிக்கலாம்?" என்று அவளோடு சேர்ந்து யோசிப்பது... இதுதான் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும். அதனால்தான் ஒரு ஆணின் "கம்பீரம்" அவன் முகத்திலோ உடம்பிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதுதான் உண்மையான அன்பு

அவன் பொறுப்பை எப்படி சுமக்கிறான் என்பதில் தான் அவனுடைய உண்மையான கம்பீரம் இருக்கு. மொத ராத்திரியும், விஸ்வநாத் அண்ட் சன்ஸும் கதையில் வேற வேற பாதையில் பயணித்தாலும், இந்த இடத்தில் வந்து ஒன்றாக நிக்கிறது. காதல் என்பது தினமும் "ஐ லவ் யூ" சொல்லிக்கிட்டே இருப்பது மட்டும் கிடையாது. சில நேரங்களில் எதுவும் பேசாமல் அருகில் நிற்பது.

டோரதி படத்தை பார்த்து வெற்றி மாறன் சொன்ன வார்த்தை.. விமர்சனமும், பாராட்டும் விவாதம்!
சில நேரங்களில் நாமே நம்ம மேல நம்பிக்கை இழந்தாலும், "நீ முடிப்ப... நான் இருக்கேன்" என்று நம்பிக்கை கொடுப்பது. அதுதான் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்மீது வரக்கூடிய பெரிய நம்பிக்கை. அதனால பெண்களுக்கும் ஒரு சின்ன விஷயம்... உங்களை சுற்றி அழகான ஆண்கள் இருக்கலாம். கம்பீரமான ஆண்கள் இருக்கலாம். நல்ல வேலை, பணம், புகழ் எல்லாம் இருக்கலாம்.

Review social media movie

புருஷ லட்சணம்

ஆனா வாழ்க்கையில் ஒருத்தர் மட்டும், "உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் என்னிடம் சொல்லு... நான் உன்னோட இருக்கேன்" என்று சொல்லி, அந்த வார்த்தையை காப்பாற்றுறவராக இருந்தால்... அந்த குணத்தை சாதாரணமாக எடுத்துக்காதீங்க. அதே நேரத்தில் ஆண்களுக்கும் ஒரு விஷயம். பெண்ணை பாதுகாப்பது என்ற பெயரில் அவளுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்துவது பாதுகாப்பு கிடையாது. அவள் தானாக இருக்கிறதற்கும், தன்னுடைய முடிவுகளை எடுப்பதற்கும் துணையாக நிற்பதுதான் உண்மையான பாதுகாப்பு. ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், ஒரு குடும்பத்துக்கு நம்பிக்கையாகவும், வாழ்க்கை முழுக்க துணையாகவும் நிற்கும் அந்த குணம்தான் உண்மையான "புருஷன் லட்சணம்."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+