விஜய் டிவி பிரைம் டைம் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. கதாநாயகி சீரியலை விட்டு விலக காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மோதலும் காதலும்" சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிகை ஸ்ரீதேவி அசோக் நடித்து வருகிறார். இவர் தற்போது சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இவருக்கு பதிலாக சீரியல் நடிகை "கிருத்திகா" இனி நந்தினி ஆக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சீரியலில் பொதுவாக இவருக்கு பதில் இவர் என்று ஆட்கள் மாறிக் கொண்டு இருப்பது புதியதல்ல. காரணம் சீரியல் பல வருடங்களாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பல நடிகர்களால் தொடர்ந்து தாங்கள் நடிக்கும் கேரக்டரில் தொடர முடியாமல் போய்விடுகிறது. காரணம் ஒரே நேரத்தில் ஒரு சில நடிகர்கள் பல சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.

அதில் குறிப்பிட்ட ஒரு சில சீரியல்களில் இருந்து திடீரென்று விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பர்சனல் காரணங்களுக்காவும் சீரியல்களில் இருந்து வெளியேறுகிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் பாசிட்டிவ் கேரக்டரில் மட்டுமல்லாமல் அதிகமாக நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இவருக்கு திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து முதல் பெண் குழந்தை பிறந்தது. முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் போது ஸ்ரீதேவி தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறக்கும் போது சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடங்கியிருந்தார். இந்த நிலையில் இப்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

அதுவும் நிறைமாதமாக இருக்கும் நிலையில் ஸ்ரீதேவி விஜய் டிவியில் பொன்னி சீரியல் மற்றும் மோதலும் காதலும் சீரியல் என இரண்டு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் 15 நாட்கள் ஒரு சீரியலிலும் இரண்டாவது 15 நாட்கள் இன்னொரு சீரியல் களிலும் கால் சீட்டு கொடுத்து இவர் நடித்து வருவதால் இவரால் டெலிவரி நெருங்கும் நேரத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இவர் மோதலும் காதலும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறாராம். அவருக்கு பதிலாக சீரியல் நடிகை கிருத்திகா இனி மோதலும் காதலும் சீரியலில் நந்தனியாக நடிகை இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கிருத்திகா ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் சமீபத்தில் முடிவடைந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் விஜிமா கேரக்டரில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இப்போது மீண்டும் இவர் விஜய் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறார். அதுபோல கிருத்திகா சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் நடித்தி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் உடல் எடை கூடி இருந்த கிரித்திகா இப்போது டயட் மற்றும் உடற்பயிற்சி காரணமாக உடல் எடை மெலிந்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய மகள்களும் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications