பரவை முனியம்மாவிற்கும் சித்தார்த் அபிமன்யுவுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா? இயக்குனர் உடைத்த ரகசியம்
சென்னை: பல தெலுங்கு திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து பிரபலமானவர்தான் மோகன் ராஜா.
இவர் இயக்கத்தில் பெரிய அளவில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் பற்றிய சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் உருவான விதம் குறித்தும் அதற்கு இன்ஸ்பிரேஷனாக பரவை முனியம்மா தான் இருந்தார் என்பது பற்றியும் அந்த பேட்டியில் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.
இயக்குனர் மோகன் ராஜா ஆரம்பத்தில் பல பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்து கொண்டிருந்தது போலத்தான் ஜெயம் திரைப்படத்தையும் ரீமேக் செய்தார். அந்த திரைப்படத்தில் தான் அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானதால் இப்ப வரைக்கும் அவர் ஜெயம் ரவி என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறார். அதற்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற பல படங்களை மோகன் ராஜா இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் மோகன் ராஜாவே சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா என பல பிரபலங்கள் நடித்து பெரிய அளவில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதுபோல அந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு வில்லன் கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
பொதுவாக ஹீரோவை விட வில்லனை அதிகமான ரசிகர்கள் விரும்பினால் அந்த படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என்பதற்கு தனி ஒருவன் படம் பெரிய அளவில் முன்மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால் அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த மோசமான வில்லன் கதாபாத்திரத்திற்கு மோகன் ராஜா பரவை முனியம்மாவை வைத்து தான் ரெஃபரன்ஸ் எடுத்தாராம். இது யாருக்கும் நம்ப முடியாத தகவலாக தான் இருக்கும்.
ஆனால் அது பற்றி மோகன் ராஜாவே பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இதுவரைக்கும் பல தமிழ் சினிமாவில் காட்டாத ஒரு வில்லனாக சித்தார்த் அபிமன்யுவை காட்ட வேண்டும் என்று நான் பல திரைப்படங்களில் ரெஃபரன்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கடைசியாக சி எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் என்ற திரைப்படத்தையும் போட்டு பார்த்து அதில் அந்த சீனையும் ரெஃபரன்ஸாக எடுத்து அதை வைத்து தான் சித்தார்த்த அபிபன்யு கேரக்டரையே உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார்.
அதாவது தமிழ் படம் கிளைமாக்ஸ் முழுக்க வில்லன் திரும்பியே இருப்பார் அப்போது அவர் யாரென்று யாருக்குமே தெரியாது. கடைசியாக அந்த சேர் திரும்பியதும் பரவை முனியம்மா தான் வில்லி. அவர் சொல்லும் வசனம் தான் என்னுடைய இந்த சித்தார்த்த அபிமன்யு உருவாக காரணமாக இருந்தது என்று மோகன் ராஜா சொல்லி இருக்கிறார்.
அது வேறொன்றுமில்லை "உன்னை ஹீரோவாக்க நான் வில்லன் ஆகிட்டேன்" என்று அவரோட பாட்டி சொல்வார். அதுதான் என்னுடைய இந்த கேரக்டரை உருவாக்க ஸ்ட்ராங்காக இருந்தது. இது குறித்து நான் அந்த தமிழ் பட இயக்குனர் அமுதனிடம் கூட கூறினேன். ஆனால் அமுதன் கூட இதை நம்பவில்லை என்று அந்த பேட்டியில் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications