அதுக்குள்ள திங்கட்கிழமை வந்துவிட்டதா..? “கயல்” சொன்னதை கேட்டீங்களா? நீங்களும் இது மாதிரி புலம்புனீங்களா
சென்னை: ஸ்கூல் குழந்தைகளாக இருந்தாலும் சரி, கல்லூரிக்கும் வேலைக்கும் போகுபவராக இருந்தாலும் சரி இந்த திங்கட்கிழமை வந்துவிட்டால் அவ்வளவு அலுப்பு வந்து விடுகிறது.
அதற்கு சன் டிவி கயலும் விதிவிலக்கல்ல என்று இப்போது ஒரு வீடியோவில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

ஐயோ நேற்று தானே ஞாயிற்று கிழமை வந்தது. அதுக்குள்ள திங்கட்கிழமை வந்து வந்துவிட்டதா? இன்னைக்கு வேலை இருக்கிறதே என்று புலம்பும் கயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி கயல் கேரக்டரில் நடித்து வருகிறார். தியாகத்தின் மறு உருவமாக கயல் இருந்து வருவதாலேயே அதிகமான பெண்கள் இந்த சீரியலை எத்தனை தொடரும் வந்தாலும் திகட்டாமல் பார்த்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனாலேயே இந்த சீரியல் டாப் 10 டிஆர்பி யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை என்பது பலருக்கும் வெறுப்பான நாளாக தான் இருக்கும். திங்கட்கிழமை வந்துவிட்டாலே இன்னும் ஞாயிற்றுக்கிழமைக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று எண்ணுபவர்கள் பல கோடி பேர் என்று சொல்லலாம். ஸ்கூல் படிக்கும்போது நாளைக்கு வேற ஸ்கூலுக்கு போகணுமே என்று ஏங்கிய அதே மனநிலை தான் பல வருடங்கள் கழித்து வேலைக்கு போய்க் கொண்டிருக்கும் போதும் தொடர்கிறது.
இந்த நிலையில் அதை கயல் சைத்ரா ரெட்டியும் உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார். அதில், அதுக்குள்ள திங்கட்கிழமை வந்துடுச்சா? நேத்தைக்கு தானே சண்டே. அதுக்குள்ள இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிடுச்சு? சூட்டிங் வரது பிரச்சனை இல்ல ஆனா எழில் கல்யாணம்னு சொல்லி ஒரு காஸ்டிம். ஒரு மாசம் ஃபுல்லா போட வச்சுட்டாங்க. சீரியல்ல தொடரும்னு சிம்பிளா போட்டுருவாங்க. ஆனா அந்த கண்டினியூட்டி காஸ்ட்யூம்க்காக ஹேர் ஸ்டைல், மேக்கப்.. ஒரு மாசமா(யோசித்து அழுத்து கொள்கிறார்). அதைத்தான் என்னால தாங்க முடியல.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்று புலம்பிக்கொண்டு எவ்வளவு புலம்புனாலும் சரி வேலைக்கு வந்து தானே ஆகணும். நீங்களும் இந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம் புலம்பிட்டு வேலை பார்க்க போங்க. ஹேப்பி மண்டே என்று கடைசியில் செல்லமாக சிரித்த படி முடித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திங்கட்கிழமை நினைத்து என்னதான் புலம்பி கொண்டு இருந்தாலும் கடைசியில் நம்ம வேலையை நாம தானே பார்க்கணும் என்பது உண்மைதான். நீங்களும் உங்க வேலையை போய் பாருங்க...
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications