மூடர் கூடம் இயக்குனர் நவீன் குழந்தைகள் செய்த சாதனை.. நெகிழ்ச்சியான பதிவு! தந்தைக்கு கிடைத்த பொக்கிஷம்
சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற "மூடர் கூடம்" திரைப்படத்தை இயக்கி அதன் நாயகனாக நடித்த நவீன் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் செய்த சாதனை குறித்து மகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த குழந்தைகளுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கி அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தொடர்ச்சியாக சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில கட்சிகள் மீது தனக்கு இருக்கும் அதிர்ச்சியையும் அவர் தெரிவித்து வருகிறார். ஆனாலும் தான் என்ன கட்சி என் சார்ந்தவர் என்பது குறித்து அவர் பெரிதாக அதில் தெரிவிக்கவில்லை.

மூடர் கூடம் படம் இயக்குனர்
இதனால் இவர் அடிக்கடி ட்ரோலில் சிக்கிக் கொண்டிருக்கிறார். மூடர் கூடம் திரைப்படத்தை தொடர்ந்து கொளஞ்சி என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி தயாரிக்கவும் செய்திருந்தார். அதேபோல அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தையும் இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த 2019 ஆண்டு சிந்து ரெட்டியை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
சாதி மறுப்பு திருமணம்
நவீன் அறிவு திருமணம் பற்றி அந்த நேரத்தில் அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. காரணம் சிந்து உடன் மூடர் கூடம் திரைப்படத்தில் நவீன் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்தனர். பிறகு அப்போது இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்தது. ஆனால் பிறகு பதிவு திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை நவீன் வெளியிட்டு தாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

இயக்குனர் நவீன் பதிவு
இந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இப்படியான நிலையில்தான் இப்போது மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் நவீன் உடைய மகன் சே மூன்று தங்க பதக்கங்களையும், மகள் லெனி இரண்டு தங்க பதக்கங்களையும் குவித்திருக்கிறார்கள். இது குறித்து பெருமிதத்துடன் ஒரு தந்தையாக என்று தன்னுடைய இரண்டு குழந்தைகளின் புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications