டோஸ் விட்ட நயன்தாரா.. யாரு அவங்களையா? அதைவிடுங்க, காவாலா டான்ஸ் ஆடியவர் மூக்குத்தி அம்மனா?: பிரபலம்
சென்னை: மூக்குத்தி அம்மன் பட பூஜையின் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காஸ்ட்யூம் தொடர்பான பிரச்சினையில் உதவி இயக்குநர் ஒருவரை, நடிகை நயன்தாரா மோசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி, தமன்னாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக, இணையத்தில் தகவல்கள் பரபரத்து வருகின்றன.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் பட பூஜையில், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சியில் முதல்நாள் படப்பிடிப்பில், காஸ்ட்யூம் தொடர்பான விஷயத்தில் நயன்தாரா டென்ஷனாகிவிட்டாராம்.

உதவி இயக்குனர் - நயன்தாரா
இதனால், உதவி இயக்குநர் ஒருவரை நடிகை நயன்தாரா மோசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தெரிந்து கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி, ஷூட்டிங்கை நிறுத்த முடிவு செய்தாராம்.. பிறகு, நயன்தாராவை மாற்றிவிட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நயன்தாராவிடம் பேசி பிரச்சினையை முடித்ததாக சொல்கிறார்கள்.. எனினும், பொள்ளாச்சி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலில் படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார்கள்.. எனினும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில், நயன்தாராவுக்கு பதில், தமன்னா நடிக்க போவதாக தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தவாறே உள்ளது.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
டோஸ் விட்ட நயன்தாரா
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஏற்கனவே ரெஜினா மீது நயன்தாராவுக்கு செம கோபம் இருக்கிறது.. மூக்குத்தி அம்மன் பூஜையில், தன்னை கேட்காமலேயே செல்பி எடுத்துவிட்டாராம் ரெஜினா.. அதனால்தான், கேரவன் கூப்பிட்டு டோஸ் விட்டுள்ளார் நயன்தாரா.
பொள்ளாச்சியில் முதல்நாள் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் நடந்துள்ளது.. முதல்நாளே காஸ்ட்யூமர் டிசைனுடன் நயன்தாரா பிரச்சனை செய்துள்ளார்.. இறுதியில் சுந்தர் சி-யிடம் புகார் கொண்டு போய்விட்டார் அந்த காஸ்ட்யூமர்.. பிறகு சுந்தர் சி இந்த விஷயத்தில் தலையிட்டு, சாமி படங்களில் காஸ்ட்யூம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறி பிரச்சனையை சரி செய்துள்ளார்.. ஆகமொத்தம், நயன்தாரா ஒரு இடத்தில் இருந்தாலே அங்கே பிரச்சனைதானே?
தமன்னா அம்மனா
இந்த சம்பவத்துக்கு பிறகு, நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை போடலாமா? என்று சுந்தர் சி யோசித்து வருவதாக தகவல் வெளியாகிவிட்டது.. காவாலா பாட்டில் ஆடிய தமன்னாவை கொண்டுவந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க வைத்தால் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லையா? பேய் பிசாசு என்றால் ஒப்புக் கொள்வார்கள்.. சாமி வேடம் என்றால் எப்படி? கேஆர் விஜயா நடிக்கக்கூடிய கேரக்டரில் சோனாவை நடிக்க வைக்க முடியுமா?
மூக்குத்தி அம்மன் முதல் நாள் ஷூட்டிங்
மூக்குத்தி அம்மன் முதல் நாள் கூட்டிங்கில் ஏற்பட்ட பஞ்சாயத்து இப்போது சரியாகிவிட்டது. ஆனால், அடுத்த பஞ்சாயத்து வரும.. தினமும் நயன்தாராவுக்கு ஏதாவது ஒரு டாபிக் இருந்துட்டே இருக்கணும்.. அவங்களுக்கு ஏதாவது ஒரு டாபிக் வேணும். அவங்களே சும்மா இருந்தாலும், நயன்தாரா ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று அதையும் கேள்வி கேட்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications