மோதலும் காதலும் சீரியல் விக்ரமின் மனைவி இந்த பிரபலம் தானா? பலருக்கும் தெரிந்திடாத ரகசியங்கள்
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் விக்ரம் கேரக்டரில் நடிகர் சமீர் அகமது நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன்பு ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

இந்த நிலையில் சமீர் அகமதுவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மோதலும் காதலும் சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலை வைத்து தான் எடுத்து வருகின்றனர். முதல் பாகமான கல்யாண முதல் காதல் வரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது போலவே இப்போது மோதலும் காதலும் சீரியலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனாக விக்ரம் கேரக்டரில் சமீர் அகமது நடித்து வருகிறார். அவர் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சமீர் அகமதுவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தானாம். அங்கு தான் டிசம்பர் 4, 1994 ஆம் ஆண்டு இவர் பிறந்திருக்கிறார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் மாடலாகவும், பாடி பில்டர் ஆகவும் இருக்கிறாராம். அதுவும் எம் ஆர் தமிழ்நாடு வேர்ல்ட் வைட் 2019 இல் வெற்றியாளராகவும இவர் இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் கலர் தமிழில் ஒளிபரப்பான சில்லுனு ஒரு காதல் என்ற சீரியலில் மூலமாகத்தான் இவர் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல் சீரியலில் சூர்யா குமார் என்ற கேரக்டரில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆரம்பத்தில் எதிர்பாராத விதமாக கயலை திருமணம் செய்து கொண்டு பிறகு கயலுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்ற உண்மையை தெரிந்து கயல் மீது வெறுப்பாகி அவரை பிரிந்து இருப்பார். மைனர் பெண்ணை திருமணம் செய்ததால் சூர்யா ஜெயிலுக்கும் போயிட்டு வந்திருப்பார். அதனால் கயல் மீது பெரும் கோபத்தில் இருந்த நிலையில் விதி மீண்டும் இவர்களை சந்திக்க வைத்து இருவரும் மீண்டும் திருமணம் செய்து இருப்பார்கள்.
இப்படியாக சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சமீர் அகமதுவுக்கு மோதலும் காதலும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் முதலில் விக்ரம் வேதா என்ற பெயரோடு தொடங்கப்பட்ட நிலையில் பின்பு பெயர் மாற்ற பட்டிருந்தது. இந்த நிலையில் சமீர் அகமதுவை இந்த சீரியலில் பார்த்தது இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் உருவாகி இருக்கின்றனர்.

ஆனாலும் நடிகர் சமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார். தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியோடு சமீர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது இவருடைய இளம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக இருக்கிறது. சீரியலில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கும் இவர் நிஜத்திலும் ஒரு குழந்தைக்கு அப்பா தான் என்பது பலரால் நம்ப முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.


-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications