விஜய் டிவியின் டாப் சீரியலின் கிளைமேக்ஸ் சூட் முடிந்தது.. நெகிழ்ச்சியோடு பிரபலங்களின் பதிவு
சென்னை: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த மோதலும் காதலும் சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிவடைந்து இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் இரண்டாவது பாகமாக மோதலும் காதலும் சீரியல் உருவாகி இருந்தது. இந்த சீரியல் தொடங்கியதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் முறையாக இந்த சீரியலில் கதாநாயகி அஸ்வதி தமிழில் நடிக்க தொடங்கியிருந்தார்.

அஸ்வதி வேதா கேரக்டரில் இயல்பான நடிப்பை கொடுத்திருந்தார் அதனாலயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதுபோல நடிகை நளினி காமெடியில் இந்த சீரியலில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்தது போலவே இந்த சீரியலிலும் நடித்திருப்பார். அவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களுக்கு பேவரைட் ஆக மாறி இருந்தது.
அதுபோல விக்ரம் மற்றும் வேதாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதிருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதுபோல மோதலும் காதலும் சீரியல் விக்ரம் வேதாவிற்கும் இருக்கின்றனர். டிஆர்பியிலும் நல்ல இடத்தில் தான் இந்த சீரியல் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் குழந்தையாக நடிக்கும் ஆலியா பாப்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளைமாக்ஸ் சூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆலியாவின் பிறந்தநாளோடு இந்த சீரியல் முடிவிற்கு வந்திருக்கிறது. ஆலியாவின் பிறந்தநாளை செட்டில் எல்லோரும் கொண்டாடியபடியே கிளைமேக்ஸை முடித்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகர் நடிகைகள் எல்லோரும் இனி எல்லோரையும் மிஸ் பண்ணுவதாக கூறியிருக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் முடிவடைந்ததும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த 6.30 மணி நேரத்திற்கு பனிவிழும் மலர்வனம் என்ற சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆறு முப்பது மணி நேர சீரியலுக்கு பெரிய அளவில் டிஆர்பி வராது.
ஏற்கனவே இதுபோல சிப்பிக்குள் முத்து என்ற சீரியல்தான் 6:30 மணி நேரத்திற்கு முதல்முறையாக புது சீரியலாக ஒளிபரப்பானது. ஆனால் அந்த சீரியலும் சில மாதங்களுக்குள் முடிவடைந்துவிட்டது இந்த நிலையில் பனிவிழும் மலர்வனம் சீரியல் அந்த நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்போகிறார்களே என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஏற்கனவே மோதலும் காதலும் சீரியல் ஆரம்பத்தில் வேற பிரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பான போது அதிகமான trp யில் இருந்தது. அதற்கு பிறகு திடீரென அந்த சீரியல் 6:30 மணிக்கு மாற்றியதற்கு பிறகுதான் டிஆர்பி குறைந்தது. இந்த நிலையில் இப்போது சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. இதே போல பனிவிழும் மலர்வனம் சீரியலும் இதே நேரத்தில் ஒளிபரப்பு செய்வது அந்த சீரியல் ரசிகர்களை மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் மோதலும் காதலும் சீரியலை பலர் மிஸ் பண்ணி வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications