நடிகை உடன் காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ.. ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் சீரியலில் இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் சல்மானுல் அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகையை காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
பொதுவாக சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த்தும் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியும் காதலிப்பதை தெரிவித்து இருந்தனர். இவர்களுடைய திருமணமும் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

அந்த வரிசையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள். இரண்டாவது பாகத்தில் நடித்த சல்மானுல் அவரோடு மலையாள சீரியலில் ஒன்றாக நடித்த மேகா மகேஷ் என்பவரை காதலிக்கிறார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அப்போது அதிகமான ரசிகர்கள் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்த சல்மானுல் இப்போது தன்னுடைய காதலை ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார்
மௌன ராகம் சீரியல் முடிவடைந்த பிறகு மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்கிற சீரியலில் சல்மானுல் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தான் மேகா மகேஷ் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறியிருக்கிறது.
இந்த சீரியலிலும் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்பது கேரளா ரசிகர்கள் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதுபோல சல்மானுல் விஜய் டிவியில் மௌனராகம் சீரியலில் மட்டுமல்லாமல் ஆடுகளம் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதோடு சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவ்வாக இருக்கும் சல்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று மேகா மகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சஞ்சு முதல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆகி உள்ளோம். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை ஏற்ற இறக்கங்கள் துன்பங்கள் பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். சல்மானுல் இந்த பதிவிற்கு ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications