ரூ 2 லட்சம் தந்தால்தான் உடலை கொடுப்போம்ன்னாங்க! நடிகை சரண்யா வீட்டில்தான்! நிழல்கள் ராஜசேகர் மனைவி
சென்னை: ரூ. 2 லட்சம் கொடுத்தால்தான் உடலை கொடுப்பேன் என மருத்துவர்கள் தெரிவித்ததாக நிழல்கள் பட நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா கண்ணீர் மல்க தெரிவித்தார். 3 நாட்களாக தனது கணவரை மருத்துவர்கள் காட்டவே இல்லை என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா வாவ் தமிழாவில் கூறியிருப்பதாவது: இரவு 10 மணிக்கு சத்யா ஷூட்டிங்கிற்கு சென்று வந்தோம். சரியாக 11 மணிக்கு நெஞ்சு வலிக்குது என என் கணவர் ராஜசேகர் தெரிவித்தார்.

பின்னர் கேஸ்டிரிக் பிரச்சினையாக இருக்கும் என நினைத்து வெந்நீர் வைத்துக் கொடுத்தேன். சரியாக மணி 12 ஆனது! நெஞ்சு வலி அதிகமாகிவிட்டது. மூச்சுவிட முடியவில்லை.
தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அங்கு இரவு 12 மணிக்கு என்னிடம் பணம் செலுத்த சொன்னார்கள். அப்போது என்னிடம் கையில் பணம் இல்லை. வங்கி அக்கவுண்ட்டில் இருக்கிறது. ஏடிஎம் கார்டெல்லாம் அப்போது கிடையாது.
அதனால் நீங்கள் சிகிச்சை கொடுங்கள், அவர் மூச்சுவிட முடியாமல் துடிக்கிறார் என்றேன். ஆனால் அவர்களோ பணத்தை கொடுங்கள், நாங்கள் சிகிச்சை கொடுக்கிறோம் என்றார்கள். பின்னர் ஐசியூ வார்டுக்கு அழைத்து சென்ற போது என் கணவர் எங்கே என நான் தேடினேன்.
அப்போது மருத்துவர்கள், "அவர் இருக்கிறார், இருக்கிறார்" என்றார்கள். நானோ அவரை அட்மிட் செய்து 3 நாட்களாக எனக்கு காட்டவே இல்லை. நான் வெளியே உட்கார்ந்தேன். ஐசியூவில் ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் செலவு செய்ய சொல்லி விஐபி வார்டில் கொண்டு சென்றார்கள். நானோ வேண்டாம், ஜெனரல் வார்டிலேயே பாருங்கள் என்றேன்.
பின்னர் என் கணவர் இறந்துவிட்டார். இதற்கு 2 லட்சம் கட்டினால்தான் உடலை கொடுப்போம் என்றார்கள். என் கணவர் இறந்த போது அவருடைய குடும்பத்தினர் யாருமே வரவில்லை. எனக்கு சுடுகாட்டில் கூட இடம் தர மாட்டார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் தான் சரண்யா வீட்டில்தான் தங்கியிருந்ததாகவும் தாரா தெரிவித்திருந்தார்.
நடிகர் ராஜசேகர், வங்கியில் கடன் வாங்கி ஆசை ஆசையாய் சென்னை வடபழனியில் வீடு ஒன்றை கட்டி வாழ நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் வங்கியில் கடனை கட்டச் சொல்லி தாராவிடம் வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. கணவர் இறப்பிற்கு பிறகு இருந்த சொத்துகளை விற்று கடனை அடைக்க முயன்ற போது சிலர் என்னை ஏமாற்றினார்கள்.
கோர்ட்டில் ஜப்தி ஆர்டர் கொடுக்கப்பட்டதால் கோர்ட் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டுக்கு சீல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் நடிகர் சங்கத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடபழனி வாங்கிய வீட்டின் மதிப்பு ரூ 60 லட்சம் என சொல்லப்படுகிறது.
நிழல்கள் படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஹீரோ, சினிமா இயக்குநர், சின்னத்திரை நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். ஒரு தலை ராகம் படத்தில் ஒளிப்பதிவாளராக சேர்ந்தார். பின்னர் பாலைவனச் சோலை, நிழல்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முதலில் நடிகை சரண்யாவை திருமணம் செய்து கொண்டார். அந்த கல்யாணம் விவாகரத்து ஆனதை அடுத்து தாராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் சரவணன் மீனாட்சி, தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications