“சின்ன பாப்பா பெரிய பாப்பா”வில் நடித்த அந்த காட்சி.. கமல் திட்டுனாரு! எம்.எஸ் பாஸ்கர் ஓப்பன் அப்
சென்னை: நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தாலும் அவர் நடித்த "சின்ன பாப்பா பெரிய பாப்பா" சீரியலின் "பட்டாபி" கேரக்டர் யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. சிரிப்பே வராதவர்களையும் கூட இவருடைய அந்த நடிப்பை பார்த்தாலே வயிறு வலிக்க சிரித்து விடுவார்கள். அவ்வளவு முக எக்ஸ்பிரஷன் மற்றும் வசனங்கள் அந்த சீரியலில் இயல்பாக இருக்கும்.
தற்போது எம்.எஸ் பாஸ்கர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எம்.எஸ். பாஸ்கர் தான் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் தான் நடித்த ஒரு காட்சி குறித்து கமல் என்னை கூப்பிட்டு திட்டினார் என்று சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இப்போதுள்ள தலைமுறைகள் பலருக்கும் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் நடிப்பு வேற லெவல் என்று புகழ்ந்து வருகிறார்கள். அவருடைய நடிப்பை திரைப்படங்களில் பார்த்து ஆகா ஓகோ என்று புகழ்கிறவர்கள் ஆரம்பத்தில் அவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்ததை பார்த்தால் என்ன சொல்வார்கள் என்றே தெரியவில்லை.. அந்த சீரியலில் எல்லா நடிகர்களுமே காமெடியாக நடித்திருப்பார்கள்
அதில் நடிகை நளினி, நிரோஷா மறைந்த விஜே சித்து போன்ற பலர் நடித்திருந்தார்கள். அந்த சீரியல் கூட சன் டிவியில் தான் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல். இந்த சீரியலில் பட்டாபி கேரக்டரில் எம்.எஸ் பாஸ்கர் நடித்திருப்பார். அதிலும் சரியாக காது கேட்காதது போன்று இவர் எப்போதும் ஒரு கையை காது பக்கத்தில் விசிறி போல வைத்து கொண்டே பேசுவார்.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அந்த நேரத்தில் சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் தான் பலருடைய ஃபேவரைட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த சீரியலை தான் பார்த்து வந்தார்கள். அழுகாட்சிகள் இல்லை காமெடியான அடிதடிகளும் சண்டை சச்சரவுகளும் தான் அந்த சீரியலில் இருந்ததால் அதை பலரும் பார்த்து ரசித்து வந்தனர்.
அது குறித்து பல வருடம் கழித்து எம்.எஸ். பாஸ்கர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் என்னை சூப்பர் பட்டாபியாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிக்க கூப்பிட்டார்கள். முதலில் எனக்காக அந்த கேரக்டர் வைக்கப்படவில்லை. இன்னொரு காமெடி நடிகருக்காக தான் அந்த கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் என்னை நடிக்க கூப்பிட்டார்கள்.
நான் ஒரு சில வாரங்கள் நடிக்க வேண்டியது இருக்கும் என்று நினைத்தேன். முதலில் கதையும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் என்னுடைய நடிப்பு மக்களுக்கு பிடித்து போய்விடவே அதற்கு பிறகு தான் அந்த கேரக்டரை கடைசி வரைக்கும் கொண்டு போனார்கள். நான் எப்போதும் காது பக்கத்தில் கையை வைத்துக்கொண்டு சொல்லுங்கள் என்று சொல்லுவேன். அதைப் பார்த்து பலர் உண்மையில் நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூட நினைத்து இருக்கிறார்கள்.
அதுபோல அந்த சீரியலில் ஒரு காட்சி என்னால் மறக்க முடியாது. அது ஒரு எபிசோடில் என்னுடைய உடம்பெல்லாம் தங்கமாக மாறிவிடும். நான் தூங்கி முழித்த போது என்னுடைய கை இரண்டு விரல்களை வெட்டிக் கொண்டு போய் விடுவார்கள்.
அது குறித்த எபிசோடு சூட்டிங் நடக்கும் போது டைரக்டர் என்னிடம் உங்க ரெண்டு விரலை காணல என்று நீங்க பதறுவது போன்று காட்சி நீங்க எப்படி பண்ண போறீங்க என்று கேட்டார்.
நான் அதற்கு என்னுடைய விருப்பப்படி இதில் நடிக்கலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கேட்கவா போறீங்க உங்க இஷ்டம் போல செய்யுங்கள் என்று சொல்ல, சரி என்று நான் தூங்கி முழித்து என்னுடைய இரண்டு கைகளையும் முகத்தில் வைத்தபடி அப்பா பகவானே என்று சொல்லியபடி என் கையை பார்ப்பேன் அப்போது இரண்டு விரல் இல்லை என்பதால் என்னுடைய ரெண்டு விரலுக்கு மட்டும் குஷ்டம் வந்து விட்டதா? என்று நான் சொல்ல அங்கிருந்து எல்லோருமே சிரித்து விட்டார்கள்.
இந்த எபிசோட்டை கமல் சாரும் பார்த்திருக்கிறார். அதனால் அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்ப நானும் அவரை பார்க்க போயிருந்தேன். அப்போது எல்லோர் முன்பும் என்னிடம் வாங்க என்று வரவேற்றார். பிறகு கதவை பூட்டியதும் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் நீ பெயிண்டையெல்லாம் பூசிட்டு நடிச்ச எபிசோடை பார்த்தேன்.
ஏற்கனவே சினிமாவில் இதுபோல உடம்பெல்லாம் பெயிண்ட் அடித்துக்கொண்டு நடித்த ஒருவர் அதனாலேயே இறந்து போய்விட்டார்.அது உனக்கு தெரியுமா? என்று என்னை திட்டினார். உண்மையில் எனக்கும் அந்த நேரத்தில் பெயிண்ட் அடித்த போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. உடம்பில் உள்ள துவாரங்கள் எல்லாம் அந்த பெயிண்டால் அடைக்கப்பட்டு விட்டதால் கையெல்லாம் விறைத்து போனது போல இருந்தது.
பிறகு சூட் முடிந்ததும் என் மேலே எண்ணெய் தேச்சு ஆயுள் பாத் எடுத்தேன். ஆனாலும் அது தவறான வழி என்று கமல் என்னிடம் சொன்னார். நடிக்க வந்துவிட்டால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் ஆனால் உயிர் முக்கியம் அதையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு அட்வைஸ் கொடுத்தார் என்று அந்த பேட்டியில் எம்.எஸ் பாஸ்கர் பேசியிருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications