Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லையின் கையைப் பிடித்த மூர்த்தி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லையின் கையைப் பிடித்துத் தூக்கினார் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் பரபரப்பு.. நாம சொல்லலீங்க.. இப்படி ஒரு வீடியோவைப் போட்டு கலகலப்பைக் கிளப்பியதே சாட்சாத் முல்லை - மூர்த்திதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் நாளுக்குநாள் இதற்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டு வருகிறது.

டிஆர்பி ரேட்டிங் இந்த சீரியலுக்கு நல்ல ஒரு வளர்ச்சி இருக்கிறது. அந்த சீரியலில் முல்லை கதிர் தனம் மீனா என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை கதாபாத்திரங்களின் பெயர்களில் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் இது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 முல்லையின் சேட்டைகள்

முல்லையின் சேட்டைகள்

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் இருந்து இப்ப கொஞ்ச நாளாகவே பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சூட்டிங் இல்லாத நேரத்தில் கலகலப்பாக செய்த சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. மூர்த்தி கேரக்டரில் இந்த வீட்டில் மூத்த அண்ணனாக நடித்துக்கொண்டு வரும் மூர்த்தியும், முல்லையும் ஜாலியாக எடுத்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 செம ரசிகர்கள்

செம ரசிகர்கள்

இந்த சீரியலின் கதை பல படங்களிலும் சீரியல்களிலும் ஏற்கனவே வந்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் கதைக்கு ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த குடும்பத்தை கட்டிக்காக்கும் மூத்த அண்ணனாக சத்தியமூர்த்தி எனும் கேரக்டரில் ஸ்டாலின் நடித்திருக்கிறார். இவரை எல்லோரும் அண்ணனாக தான் நினைக்கிறார்கள். அவர் பெயர் கூட பலருக்கு தெரியவில்லை. அவரை அந்த சீரியலில் நடிக்கும் முல்லை மாமா என்றுதான் அழைப்பாராம்.

 முல்லையின் கொண்டாட்டம்

முல்லையின் கொண்டாட்டம்

தற்போது மீனாவின் வளைகாப்புருக்கு அனைத்து விஜய் டிவி சீரியல் நடிகர்களும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கலக்கிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படும் என்றும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் சூட்டிங் இல்லாத நேரத்தில் இந்த முல்லை பண்ணுகிற கொண்டாட்டத்திற்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

 முல்லையும் மூர்த்தியும்

முல்லையும் மூர்த்தியும்

அனைவரையும் கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கும் இவர் இப்போது மூர்த்தியை பிடித்து வம்பு பண்ணியிருக்கிறார். அதுவும் இன்ஸ்டாகிராமில் இப்போ வைரலாக பரவி வருகிறது. அவர் தனது கையில் பச்சை குத்தி இருக்கும் மைக்கை எல்லோரும் இதுவரைக்கும் பார்த்து தான் ரசித்திருப்பீர்கள் ஆனால் இவர் இதை வேற மாதிரி யூஸ் பண்ண போகிறார் என்று கூறி மூர்த்தியிடம் கையை நீட்டுகிறார்.

 கலாய்த்த மூர்த்தி

கலாய்த்த மூர்த்தி

மூர்த்தி என்ன பண்ணப் போறார் என்று நாம யோசித்துக் கொண்டிருக்கும்போதே மூர்த்தி முல்லையின் கையை பிடித்து அதில் மைக்கில் தட்டுவது போல இவரது கையில் தட்டிவிட்டு ஹலோ ஹலோ நான் வந்து உங்க ஸ்டாலின் பேசுறேன் என்று பேசுகிறார். அவர் பேசுவது மட்டுமல்லாமல் முல்லையும் அவரது வாய்ஸில் மிமிக்ரி பண்ணிக் கொண்டிருக்கிறார். அதில் ஹைலைட் என்னவென்றால் இவர் பேசிவிட்டு இந்த மைக்கை இப்படி தான் ஊஸ் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 நல்லா ஊஸ் பண்ணுங்க

நல்லா ஊஸ் பண்ணுங்க

இதை கேட்டு சிரித்துக்கொண்டே முல்லையும் நல்லா கேட்டுக்கோங்க இப்படித்தான் ஊ...ஸ் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க என்று சிரித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் அனைவரும் ஏற்கனவே வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் சேட்டைகளும் வைரலாக பரவி வருகிறது.

 முல்லையின் ரசிகர்கள்

முல்லையின் ரசிகர்கள்

இந்த சீரியலில் எல்லோரை விடவும் முல்லைக்கு தான் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் இந்த சீரியலில் அழுவது போன்று சீன் வந்தபோது கூட பல ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் மீம்ஸ் போட்டு வந்தனர். தற்போது இவர் கலகலப்பாக இப்படி வீடியோ போட்டிருப்பது அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம். அதேபோல என்னுமொரு வீடியோவும் போட்டிருக்கிறார். அதில் தனத்தை கலாய்த்திதருக்கிறார்.

 பிரேக்கிங் நியூஸ் கலாட்டா

பிரேக்கிங் நியூஸ் கலாட்டா

செய்தி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் சொல்வது போல ஜாலியாக உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான் போட்ட கோலத்தை தனம் போட்டதாக சொன்னதாகவும் தன்னுடைய நெக்லஸை கடனாகக் கேட்டார் நானும் சரி என்று கொடுப்பேன். ஆனால் அதை இன்னும் வரை தர திருப்பித் தர மறுக்கிறார் என்று அழுவது போலவும் இதற்கு தனம் என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 அக்கா வேற லெவல்

அக்கா வேற லெவல்

முல்லை போட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆஹா அக்கா இது வேற லெவல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சீரியல்களில் இவர் அமைதியின் சொரூபமாகவும் எதிர்த்து பேசாத செல்ல மருமகள் ஆகவும் நடித்துவிட்டு இவர் சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர் செய்யும் சேட்டைகள், அலும்புகள் தாங்கவில்லை என்று பலரும் ரசித்து வருகிறார்கள். ஆனால் விஜே சித்து இயல்பிலேயே செம கேரக்டர் என்பதை அவரை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+