என்ன சத்யராஜின் முஞ்யா-வுக்கே 100 கோடி கொடுக்குறாங்க ஹிந்தி ரசிகாஸ்.. சுந்தர்.சி போனால் சுருட்டலாமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பார்முலா இப்போது ஹிந்தி திரை உலகிலும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு என்னதான் முட்டுக் கொடுத்து உழைத்தாலும், சுந்தர்.சி மாதிரியோ ராகவா லாரன்ஸ் மாதிரியோ படத்தை எடுக்க முடியவில்லை. திகிலும் இல்லை, நகைச்சுவையும் இல்லை என்ற கட்டத்தில் போய் முட்டினாலும், "முஞ்யா" (Munjya) போன்ற படமெல்லாம் 100 கோடியை பாக்ஸ் ஆபீசில் பெற்றுள்ளதை பார்க்கும்போது சுந்தர்.சி பாலிவுட் பக்கம் போனால் பல கோடிகளை அள்ளலாம், ஏன் அவதார் படம் போல ஆயிரம் கோடியையும் அள்ளலாம் போல இருக்கே என்ற கேள்வி எழாமல் இல்லை.

அது ஏன் "Munjya" படத்தை உதாரணத்திற்கு எடுத்தோம் என்றால், சத்யராஜ் நடித்துள்ள 3வது ஹிந்தி படம் இதுவாச்சே அப்படி எதை பார்த்து பிடிச்சி போய், இந்த படத்தை ஒப்புக்கொண்டார் என்பதை தெரிந்துகொள்ளலாமே என்று கட்டுரையாளர் முழு படத்தையும் உட்கார்ந்து பார்த்ததால்தான் மக்களே.

ott munjya

கதைக்களம்: முஞ்யா கொங்கணி நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு இளைஞன் மற்றும் ஒரு பேய் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை மையமாகக் கொண்டது. திகில், நகைச்சுவை மற்றும் காதல் ஆகிய மூன்று உணர்வுகளையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த படம் படு கஷ்டப்பட்டு முயற்சிக்கிறது.

திகில்: திகில் காட்சிகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. திகில் என அவர்கள் நினைப்பதும் நமக்கு காமெடி அல்லது கடுப்பு ரகம்தான். பேயின் தோற்றம் மற்றும் செயல்கள் நகைச்சுவையாகவும் இருப்பதால், திகில் உணர்வை அது முழுமையாக உருவாகவில்லை.

ott munjya

நகைச்சுவை: நகைச்சுவை காட்சிகள் அதிகமாகவே இருக்க வேண்டும் என்று படக் குழு மெனக்கெட்டுள்ளது. ஆனால் அவை அதிரடி சரவெடியாக இல்லாமல், ஊசிப் பட்டாசு போல பட்டும்படாமல் தொட்டும் தொடாமல் உள்ளன. வெடி சிரிப்புக்கு ஒரு இடமும் இல்லை. லைட்டாக உங்கள் உதடுகள் புன்னகைக்கலாம்.

காட்சிகள்: முஞ்யா நல்லவேளையாக நம்மை காப்பாற்றுவது இந்த கேமரா மற்றும் லொகேஷன்களால்தான். கொங்கண் பகுதிக்கே போய் வந்த ஃபீல் கிடைக்கும். கோவா, மகாராஷ்டிரா பார்டரை சுற்றிப் பார்த்த திருப்தி. ஆனால் அதற்காக பேய், நகைச்சுவை என்றெல்லாம் இந்த படம் பற்றி சொல்வது குஸ்காவை காட்டி பிரியாணி என்று நினைத்து சாப்பிட சொல்வதற்கு சமம்.

ott munjya

அரண்மனை 4: செயற்கைத்தனம் மிக்க அரண்மனை 4 கூட அப்பப்போ கொஞ்சம் வெடி சிரிப்பு, சில பயமுறுத்தல் என இருந்தது. அதையே கழுவி ஊற்றினோம். ஆனால் முஞ்யாவுக்கு 100 கோடி என்பதெல்லாம் டூ மச் மக்களே. அரண்மனை 1, அரண்மனை 2 படங்களின் பாணியில் சுந்தர்.சி அல்லது முனி, காஞ்சனா பாணியில் ராகவா லாரன்ஸ் படத்தை எடுத்து, கூடவே இப்படி கொங்கன் அல்லது ராஜஸ்தானில் சூட்டிங் வைத்தால் ஆயிரம் கோடியை ஹிந்தி வாலாக்களிடமிருந்து அபாரமாக அள்ளலாம் என்பது மட்டும்தான் படம் பார்க்கும்போது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

உங்களுக்கு டவுட் இருந்தால் "முஞ்யா" படத்தை ஹாட்ஸ்டாரில் (Munjya OTT) பாருங்கள். ஹிந்தி பேசுகிறார்கள், ஆங்கில சப்ஹெட்டிங் உதவியோடு பார்க்கலாம். கஷ்டமில்லை. ஆனால் கடைசி வரை ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. இடைவேளைக்கு பிறகு வரும் கொஞ்ச நேர காட்சிக்காக சத்யராஜ் ஏன் கமிட் ஆனார் என்பதுதான் அந்த கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+