என்னையே முதல் தடவை வெட்கப்பட வச்சுருச்சே.. கோபிநாத்
சென்னை: முறைப்பையன் VS முறைப்பொண்ணு! நீயா நானா வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் பார்த்து மகிழுங்கள்.
அதன் ப்ரோமோவே நம்ம ஊர் வாசனையை உணர்த்துவதாக இருக்கிறது. முறைப் பையன்.. முறைப்பொண்ணு மனசில் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கிட்டே இருக்கும்.
அத்தனை விஷயங்களையும் வெளியில் கொண்டு வருவது மாதிரியான இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் வழக்கம் போல நன்றாக நடத்தி இருக்கார்.

எதுக்கு வெட்கம்?
என்னதான் ஆச்சும்மா.. இப்போ என்ன சொல்லிட்டோம்னு எதுக்கு இப்படி வெட்கப்படறேன்னு கோபிநாத் ஒரு அழகிய இளம் பெண்ணின் அடக்க முடியாத வெட்கத்தைப் பார்த்து கேட்கிறார். அந்த பெண்.. என் அத்தைப் பையன் சிரிக்கவே மாட்றான் சார்னு சொல்லிட்டு மறுபடியும் வெட்கப்படுவது கொள்ளை அழகு.

அது ஒரு தனி ஃபீல்
முறைப் பையன்னு சொன்னால் அது ஒரு தனி ஃபீல் சார். பெட்டுன்னு சொல்வாங்களே -அதுக்கு மேல.. லவ்வுக்கு கொஞ்சம் கீழே .. லவ்வைவிட அது ஒரு தனி ஃபீல்னு சிலாகித்தார் இன்னொரு அழகு பெண். காஸ்ட்யூம்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.. மாமா பார்ப்பாங்க அப்படி ஒரு ஃபீலிங் வரும்னு இன்னொரு பெண் சொன்னார்.

அப்படி ஏன்?
அப்படி ஏன் என்று கேட்டபோது,தெரியலை சார்.. அப்படித்தான் தோணும்னு அந்த பெண் மேலும் வெட்கப்பட்டார். இப்படி இன்னும் இன்னும் என்று தங்களது உணர்வுகளை முறைப் பெண்கள் பகிர்ந்துக் கொள்ள என்னையே முதன்முதலா வெட்கப்பட வச்சுட் டீங்க என்று கோபிநாத் வெட்கத்துடன் சிரித்தார்.

ஹைலைட் நிகழ்ச்சி
ஆரம்பத்தில் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்த நீயா நானா இப்போது அவ்வளவாக ரேட்டிங்கில் இடம் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.அதற்கு நேரம் மாற்றம் ஒரு காரணம்.இதை விஜய் டிவி உணராதது ஏன் என்று தெரியவில்லை.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications