Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல பாடலை பாடியது இவரா? தக்காளி சாதத்துடன் ஓடிய இசையமைப்பாளர் பரணி! வாவ் அசைந்தாடும் காற்றுக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சையை சேர்ந்த இசையமைப்பாளர் பரணி, 1999ல் வெளிவந்த சூர்யாவின் பெரியண்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து 2001ல் பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் தனது சிறப்பான இசையை மக்களிடம் கொடுத்தார்.. பிறகு சார்லி சாப்ளின், சுந்தரா ட்ராவல்ஸ் எஸ் மேடம் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.. இதில் பார்வை ஒன்றே போதும் படபாடல்கள் எல்லாமே அப்போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.. இதுகுறித்து தன்னுடைய இசை அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பரணி.

Jaya Max யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல இசையமைப்பாளர் பரணி, பார்வை ஒன்றே போதும் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு, வரவேற்பு பற்றி விரிவாக பேசியிருக்கிறார்..

music composer Bharani says about without getting an opportunity and what did he say about parvai ondre pothum asainthadum kaatrukkum song

பெரியண்ணா - வாய்ப்பு

அதில், "நான் பெரியண்ணா படம் முடித்துவிட்டு, நிறைய பேரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன்.. யாருமே என்னை நம்பல.. இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. சினிமாவில் பின்னணி இருந்தால் மட்டுமே நிறைய வாய்ப்பு கிடைக்கும்.. எனக்கு எந்த வாய்ப்பும் வரல.. பிறகுதான், என்னுடைய நண்பர் சதா என்பவர், பார்வை ஒன்றே போதும் படத்தை இயக்க வந்தார்..

சில காரணங்களால் அவரால் அந்த படத்தை இயக்க முடியவில்லை.. பிறகு, முரளி கிருஷ்ணா படத்தை இயக்க முன்வந்தார்.. அந்த படத்துக்கு நான் வெறும் மியூசிக் டைரக்டர் மட்டுமல்ல, ஒரு மேனேஜர் போலவே இருந்து பணியாற்றினேன்..தினமும் வீட்டிலிருந்து தக்காளி சாதம் கட்டி எடுத்துக்கொண்டு, அந்த பட ஆபீசுக்கு செல்வேன்.. இப்படி அலுவலக வேலை போல எடுத்து செய்தேன்.... இதை யாரிடமும் இதுவரை சொன்னதில்லை..

தக்காளி சாதத்துடன்

ராஜபாலன் எனக்கு நெருக்கமாகிவிட்டதால், அந்த கம்பெனியை நான்தான் இருந்து பார்த்து கொள்ள வேண்டிய சூழலும் வந்தது.. ஒரு கோடி ரூபாய் வரை செலவாகினாலும், அத்தனையும் என் மூலமே பணம் சென்றது.. இதில் 5 பைசாகூட எனக்காக செலவு செய்து கொண்டதில்லை.. இறுதியில் பார்வை ஒன்றே போதும் படம் சூப்பராக ஓடியது.. திருச்சியில் 100 நாளை தாண்டியும் ஓடியது..

சின்ன தம்பி படத்துக்குப் பிறகு, எங்கே பார்த்தாலும் பார்வை ஒன்றே போதும் பாட்டுக்கள்தான் ஒலித்தது.. அந்த படம் தந்த சந்தோஷத்தை வேறு படங்கள் எனக்கு தரவில்லை.

ஏற்கனவே இயக்குவதாக இருந்த சதா என்பவருக்குதான், அசைந்தாடும் காற்றுக்கு, திரும்ப திரும்ப என்ற 2 பாடல்களும் கம்போஸ் செய்தேன்... பிறகுதான், மீண்டும் அதே படத்துக்கு பயன்படுத்தினேன்..

அசைந்தாடும் காற்றுக்கும்

அசைந்தாடும் காற்றுக்கும் என்ற பாடலை ஒருமுறைதான் கேட்டார் ஜானகியம்மா.. உடனே வாய்ஸ் ரூமுக்குள் சென்று பாட ஆரம்பித்துவிட்டார்.. என்ன கம்போஸ் செய்திருந்தேனோ, அதை அப்படியே பாடினார்.. எனக்கு இது ஆச்சரியத்தை தந்துவிட்டது..

அதேபோல, "நீ பார்த்துட்டு போனாலும்" பாடலின் துவக்கத்தில் வரும் கௌசல்யா சுப்ரஜா என்ற வரிகளை என் மனைவி சுமித்ரா பாடினார். இந்த பாடலை எழுதியதும் நான்தான்.. துளிதுளியாய் பாடலை மீண்டும் ஒருமுறை என்னாலேயே தரமுடியாது என்று லண்டனிலிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து பாராட்டினார்.

பார்வை ஒன்றே போதும் படத்தை போலவே இன்னொரு ஹிட்டை தர நினைக்கிறேன்.. ஆனால், எந்த வாய்ப்பும் எனக்கு அமையவில்லை.. சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் மட்டும் எனக்கு கிடைத்தால், இசையை பிரித்து கலக்கி விடுவேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் பரணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+