மோசமாக பேசாதீர்கள்.. இப்படி பண்ணலாமா? ஏ.ஆர் ரகுமானின் மகள் ஆதங்கம்
சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மகள் "கதீஜா ரகுமான்" "மின்மினி" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் ஆக பேசுபவர்கள் குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் எங்களுடைய வேலை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதை பார்க்காமல் போய்விடுங்கள். ஆனால் அதற்காக மோசமாக பேசாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.
இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகும் நிலையில் ஒரு பக்கம் இதனால் பல்வேறு நன்மைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சமுதாய சீர்கேடுகள் மற்றும் அழிவுகளும், அடுத்தவர்களின் மனநிலையை சிதைக்கும் செயல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இணையத்தில் முகம் தெரியாது என்பதற்காக பலர் தங்களுக்கு பிடிக்காதவர்களை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி வருகிறார்கள்.

பேக் ஐடிகள் மூலம் ஒரு சிலர் செய்யும் தவறால் சிலர் நல்லதே செய்தால் கூட அவர்களும் இணையத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகள் தன்னுடைய வருத்தத்தை மின்மினி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்.
அவருடைய குடும்பத்திலிருந்து இவருடைய மகன் ஏ.ஆர் அமீம் இசை துறையில் நுழைந்து சினிமா பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். அதே வரிசையில் ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் பாடல் பாடி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ஹலீதா சமீம் இயக்கியுள்ள மின்மினி என்ற படத்தில் இசையமைப்பாளராக கதீஜா ரகுமான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கதீஜா ரகுமான் இங்கு நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஹலீதா மேடம் 2022 ஆம் ஆண்டு என்னை சந்தித்தார் அப்போது நான் இசை அமைக்க தயாராகவில்லை. அதற்கு பிறகு படம் முடிந்து ரிலீஸ் ஆகி இருக்கும் என்று நினைத்தேன்.
அதற்குப் பிறகு அவரை சந்தித்தபோது உங்களுடன் தான் வேலை செய்வேன் என்று அவர் சொன்னார். அவர்களுடன் வேலை செய்வது கடினமாக இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் இந்த எட்டு மாதங்கள் நன்றாக போனது. அவர்தான் என்னை மொத்தமாக மோல்ட் செய்தார். நீங்கள் மின்மினி படத்தில் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லுங்கள் நான் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று அவர் எனக்கு சப்போர்ட் கொடுத்தார்.

முதலில் இந்த படத்தின் டிரைலர் கட் கொடுத்தார். அதை பார்த்து நான் முடியாது எனக்கு பயமாக இருக்கிறது என்று என்னுடைய கணவரிடம் கூறினேன். அவர் தான் தயவுசெய்து இதை விட்டு விடாதே என்று என்னிடம் சொன்னார். பிறகு என்னோடு இருக்கும் நண்பர்கள் எல்லாம் நாங்கள் கூட இருக்கிறோம் நீ பண்ணு என்று எனக்கு சப்போர்ட் கொடுத்தார்கள். இந்த எட்டு மாதத்தில் இயக்குனரை நான் படுத்தி எடுத்து விட்டேன்.
நான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட போது நிறைய பேர் ஏன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தீங்க என்று கேட்டனர். அது என்னை ரொம்பவும் தொந்தரவு செய்தது. அப்போது எனது இயக்குனருக்கு பெருமை சேர்த்து தர வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படத்தை எல்லோரும் பீல் குட் படம் என்று சொல்கிறீர்கள்.
ஆனால் அது அப்படிப்பட்ட படம் அல்ல.. இது ஒரு லவ் ஸ்டோரி படம் என்று உங்களை நினைக்க வைக்கிறார்கள். அது உண்மை கிடையாது பாடல்கள் பிடித்திருந்தால் சப்போர்ட் பண்ணுங்க சமூக வலைத்தளங்களில் ரொம்ப மோசமான வார்த்தைகளை பேசாதீர்கள்... என்று அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கதீஜா ரகுமான் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications