பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. திணறும் திரிஷாவின் முத்த மழை பாட்டு.. பழைய மணிரத்னம் செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்த மழை பாட்டையாவது, தக் லைஃப் படத்தில் வைத்திருக்கலாமே? படம் பார்க்க சென்றதே அந்த பாட்டுக்காகத்தான் என்று ரசிகர்கள் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.. இந்நிலையில், முத்தமழை பாடல் யூடியூப்பில் வெளியானது. பாடகி தீயின் குரல் த்ரிஷா மைக்கில் பாடுவது போல அமைந்திருக்கும் இந்த பாடலை இணையவாசிகள் டிரோல் செய்தபடி உள்ளனர். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவோ தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தில் முத்தமழை பாட்டையாவது வைத்திருக்கலாமே? மற்ற பாடல்களும் படத்தில் முழுவதுமாக இல்லை, விண்வெளி நாயகன் பாட்டை, படத்தில் கடைசியில் வைத்திருக்கிறார்கள், என ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டினார்கள்..

Television Trisha muththa mizhai

பிறகு கடந்த வாரம் படக்குழுவினர் முத்த மழை பாடலை தனி வீடியோவாக வெளியிட்டனர்.. இதை பார்த்த நெட்டிசன்கள், அப்பாடலையும், திரிஷாவின் நடிப்பையும் ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர்.. நல்ல வேளை இந்த பாட்டை படத்தில் வைக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.. சிலர், வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் காமெடியுடன் இப்பாடலை ஒப்பிட்டு டிரோல் செய்தும் வருகிறார்கள்.

அட்டகாசமான வில்லன்கள்

இந்நிலையில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "கமல் எத்தனையோ பிளாப் படங்களை தந்துள்ளார்.. மணிரத்னம் பல படங்கள் தோல்வியடைந்துள்ளன.. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி, மணிரத்னம் பெரிய இயக்குனர் என்கிறார்கள்..

40 வருடங்களுக்கு முன்பு, முரளி, சத்யராஜ் வைத்து, பகல் நிலவு என்ற படத்தை மணிரத்னம் எடுத்தார்.. மெதுவாக படம் நகர்வது போல இருக்கும், ஆனால், வில்லன் வெயிட்டாக இருப்பார்.. பார்ப்பதற்கு சிம்பிளாக வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தாலும், குறுகிய வசனங்களுடன், அட்டகாசமாக நடித்திருப்பார் சத்யராஜ்.. அந்த படம் நன்றாக போனது.

புதிய ஸ்டைல் மணிரத்னம்

இதற்கு பிறகு, மெல்ல மெல்ல தன்னை மாற்றி கொண்டேவந்தார் மணிரத்னம்.. நாயகன் படத்துக்கு பிறகு பெரிய இயக்குனர்கள் லிஸ்ட்டில் சென்றுவிட்டார்.. மவுனராகம், தளபதி, அஞ்சலி போன்ற படங்களிலிருந்து இருட்டிலேயே படத்தை என்ற புதிய ஸ்டைலை கண்டுபிடித்ததே மணிரத்னம்தான்..

அதேபோல,எப்போதுமே தன்னுடைய பட வில்லன்களை வித்தியாசமாக காட்டக்கூடியவர் மணிரத்னம். குறிப்பாக, அக்னிநட்சத்திரம் படத்தில் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி, தளபதி படத்தில் கலிவரதன் கேரக்டரில் அம்ரிஷ்புரி, என வித்தியாசமாக தோன்றினார்கள்.

இந்த படங்கள் எல்லாம், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு பகலாக உழைத்து எடுக்கப்பட்ட படங்களாகும். இதற்கு பிறகு இன்னும் பெரிய இயக்குனராகி விட்டபிறகு சறுக்கல்கள் வரத்துவங்கிவிட்டன.

வெயிட்டான கேரக்டர்

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவை நடிக்க வைத்தாயிற்று... ஒரு பெரிய இயக்குனரான மணிரத்னம், திரிஷா மாதிரியான வேறு ஆட்கள் யாரும் தக் லைஃப் படத்துக்கு கிடைக்கவில்லையா? விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் திரிஷா முகத்தில் முதுமை தெரிகிறது.. பாடிஷேமிங்காக இதை சொல்லவில்லை.. முதுமை என்பது இயற்கையான விஷயம்..

தக் லைஃப் பட கேரக்டர் வெயிட்டானது.. அபிராமி கேரக்டரை விட திரிஷாவின் கேரக்டர் வெயிட்டானது. எனினும், இதில் கமலுக்கு ஜோடியாக வேண்டுமானால் திரிஷா நடித்திருக்கலாம்..

டூரிஸ்ட் ஃபேமிலி சிம்ரன்

டூரிஸ்ட் ஃபேமிலியில் சிம்ரனை, சின்ன பெண்ணாக காட்ட முயற்சிக்கவில்லை.. இயல்பாகவே அதில் நடிக்க வைத்திருந்தார்கள்.. அதுபோலகூட திரிஷாவை நடிக்க வைக்கலாம்.. திரிஷா நடிக்கவே கூடாது என்று சொல்வதற்கு நமக்கு உரிமையில்லை. ஆனால் அவருக்கு சரியான கேரக்டரை இயக்குனர்கள் தரவேண்டும்.

உண்மையிலேயே, முத்த மழை பாட்டில் திரிஷா நடிக்கவேயில்லை.. அதற்காக திரிஷாவை சோஷியல் மீடியாவில் டிரோல் செய்வதும் தவறானது.. படத்தில் அந்த பாடல் இடம் பெறாமலேயே இருந்திருக்கலாம். எதற்காக அதை யூடியூப்பில் ஒளிபரப்பு செய்தார்கள் தெரியவில்லை.. பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+