முத்துக்குமரன் அப்பா என்கிட்ட பேசினாரு.. நடந்த விஷயம் இதுதான்! இன்ஸ்டா பிரபலம் புது குற்றசாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் முத்துக்குமரன் பற்றி இன்ஸ்டா பிரபலம் வாஹதா அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் சமீபத்தில் முத்துக்குமரனின் அப்பா என்கிட்ட பேசினாரு என்றும், அப்போது நடந்த சம்பவங்கள் என சில விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். அது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே நேற்று அவர் சில வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அதில் நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போகிறேன், அதற்கு முன்பு கடைசியாக முத்துக்குமரனின் பெற்றோரிடம் பேசி பார்க்க போகிறேன், நீங்க என்ன சொல்றீங்க ரசிகர்களே? என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதுவும் அதிகமான கமெண்ட்களை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து ஆடியோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.

Muthukumaran

முத்துக்குமரன் பற்றிய சர்ச்சை

முத்துக்குமரன், என்னிடம் ஆசை வார்த்தை சொல்லி திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அதற்கு முத்துக்குமாரனும் மறுப்பு தெரிவித்து எந்த வீடியோ வீடியோக்களையும் வெளியிடவில்லை. இதனால் இந்த விஷயமும் ஒரு மாதமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த முத்துக்குமரன் இப்போது தீபாவளிக்கு இட்லி சாப்பிட்டபடியே சில தத்துவங்களை பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதுதான் அவருக்கே வினையாக போச்சு.

இன்ஸ்டா பிரபலம் வீடியோ

உடனே வாஹதா மீண்டும் முத்துக்குமரன் பற்றி போஸ்ட் போட்ட தொடங்கி விட்டார். ஏற்கனவே முத்துக்குமரனை ரவணன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வாஹதா இப்போ முத்துக்குமரன் மீது புகார் கொடுக்கப் போகிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கிறார். ஆனால் அங்கிருந்தபடியே ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நான் காவல் நிலையத்துக்கு வந்து விட்டேன், மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் முத்துக்குமரனின் பெற்றோரிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அவர்களுக்கு போன் அப்போது அவர்கள் ரொம்பவும் சைலண்டாக பேசினார்கள்.

முத்துக்குமரன் அப்பா சொன்ன வார்த்தை

மேலும் அவர்கள், நீங்கள் 2 பேரும் பழகுவதற்கு முன்பு அல்லது தப்பு பண்ணுவதற்கு முன்பு எங்களிடம் எதுவுமே பேசவில்லை. அப்படி இருக்கும்போது இப்போ நீ வீடியோ வெளியிடுவதால் எங்களுக்கு எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா? சொந்த குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்க அசிங்கப்படுத்துறாங்க, வெளியே போகவே கஷ்டமா இருக்கு என்று அவங்க சொல்றாங்க. அவங்க பையன் பண்ண தப்பை அவங்க நியாயப்படுத்துற மாதிரி சில இடங்களில் பேசினாலும், வெகுளியாகத்தான் உண்மையில் சொல்லணும் என்றால் முத்துக்குமரனின் அப்பா கியூட்டாகத்தான் இருக்கிறார். அவர் நீங்க ரெண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக தான பேசுறீங்க என்று கேட்கிறார்.

இவங்ககிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல, எல்லா பெற்றோரும் பிள்ளைகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. ஆனா நான் ஒரு முறை முத்துக்குமரன் பெற்றோரிடம் பேசி பார்ப்போம் என்று நினைத்தேன். ஆனால் அவங்க வெகுளியாகவும், அதே நேரத்தில் மகனுக்கு சப்போர்ட்டாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த வீடியோவில் வாஹதா தான் பேசி இருக்கிறார்.

பதில் இல்லை

மேலும் சில பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு பதிவில் நான் இனி முத்துக்குமரனை தொந்தரவு செய்ய மாட்டேன், அவரை மன்னித்து விட்டு விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு பதிவு போடுகிறார், அதில் நான் முத்துக்குமரனை சும்மா விடமாட்டேன் அவர் மீது சென்னையில் புகார் கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார். நாம் இது பற்றி அவரிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் மட்டும் தொடர்ந்து குழப்பமான பதிவுகளை போட்டு வருகிறார். இதனால் அவர் முதலில் மனநல ஆலோசகரை சந்திக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+