Bigg Boss Tamil 8ல் சாமானியனுக்கு வெற்றி.. டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு பணத்தோடு இவ்வளவு பரிசா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வின்னர் ஆகி இருக்கிறார். அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம். முத்துக்குமரனுக்கு டைட்டில் வெற்றி பெற்றதற்காக பிக் பாஸ் தரப்பில் 40 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதோடு மேலும் சில பரிசுகளும் கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 14 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்று கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இறுதி கட்டத்தில் நுழைந்த ஐந்து போட்டியாளர்களில் இன்று கிராண்ட் பினாலேவில் முதல் ஆளாக ரயான் எலிமினேட் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 4வது இடம் பிடித்த பவித்ரா வெளியேறினார். இறுதியாக பிக் பாஸிடம் இருந்து விடை பெற்றுக் கொண்ட மூன்று டாப் போட்டியாளர்களான சௌந்தர்யா, முத்துக்குமரன் மற்றும் விஜே விஷால் மூன்று பேரும் நேரடியாக பைனல் நடக்கும் மேடைக்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூன்று பேரையும் வரவேற்றனர். பிறகு மேடையில் மூன்றாம் இடம் பிடித்த விஷாலை விஜய் சேதுபதி எலிமினேட் செய்தார். அடுத்ததாக சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவர் மட்டுமே இருந்த நிலையில் அவர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற முத்துக்குமரனை கையை உயர்த்தி வெற்றி பெற்றதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு கோப்பையை வழங்கி தன்னுடைய வாழ்த்துக்களை விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். பிறகு முத்துக்குமாரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
அதோடு பிக் பாஸ் வீட்டில் அதிக முறை கேப்டனாக இருந்த போட்டியாளர்களுக்கு புல்லட் பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த பைக்கையும் முத்துக்குமரன் வென்று இருக்கிறார். இது தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் முத்துக்குமரன் வெற்றி பெற்ற 50,000 அவருக்கு வழங்கப்பட்டது.
தன்னுடைய வெற்றியை தன்னுடைய பெற்றோர் மற்றும் நண்பர்களோடு பிக் பாஸ் மேடையில் கொண்டாடி மகிழ்ந்த முத்துக்குமாரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு 10,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்களுக்கும் சேர்த்து 10 லட்சத்து ஐம்பதாயிரம் சம்பளமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications