ஏன் சின்னவரே.. மூக்குத்தியை வாங்கியாந்துட்டீங்க.. அப்படியே.. முத்துச்செல்வி கேடியாச்சே!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் வழக்கமான சீரியல்களில் இருந்து கொஞ்சமும் மாறுபடலை.
என்னவோ சீரியல் போடறாங்க.. அந்த நேரத்துல மிஸ் பண்ணாம பார்ப்போம்ன்ற மாதிரிதான் இருக்கு.

பணக்கார வீட்டு பெண்கள், ஏழைகளை பார்த்து வெடுக்கு வெடுக்குன்னு பேசறது, முத்து செல்விக்கு பெரிய இடம் கிடைச்சுருச்சுன்னு நீ வெறும் கையோட பொண்ணை வீட்டுக்கு அனுப்ப போறியான்னு கேட்கறதுன்னு பெண்கள் உசுப்பேத்தறாங்க.

இதெல்லாம் எரிச்சலா இருக்கு.முத்துச்செல்வி சின்னவருகிட்ட ஒரு முறை தனக்கு மூக்குத்தி குத்திக்க ஆசைன்னு சொல்றா. அதை நினைவுல வச்சுக்கிட்டு சின்னவரு மூக்குத்தி வாங்கிட்டு, கூடவே ஆளையும் அழைச்சுக்கிட்டு வர்றார்.

முத்துச்செல்வி.. இந்தா புள்ள.. மூக்குத்தி போடணும்.. கல்யாணத்துக்கு முன்னால மூக்கு குத்தறது உங்க சம்பிரதாயம்னு சொன்னியே.. இந்தா மூக்குத்தின்னு குடுக்கறார் சின்னவர்.
அதிருக்கட்டும் சின்னவரே... மூக்குத்தி வாங்கிகிட்டு வந்துட்டீங்க.. இதை யாரு குத்தி விடுவான்னு கேட்கறா. என்ன புள்ள.. எனக்கு இது கூடவா தெரியாது. கூடவே ஆளை அழைச்சுட்டு வந்திருக்கேன் பாருன்னு சொல்றான்.

ஏன் சின்னவரே மூக்குத்தி வாங்கித் தந்த நீங்களே எனக்கு மூக்கு குத்தி விட்டா என்னனு கேட்க, என்னால எப்படி புள்ள முடியும்னு சொல்றான். என்ன சின்னவரே, முடியாதது எல்லாம் முடிச்சு காமிக்கறீங்க.. இந்த மூக்குத்தியை குத்திவிடத் தெரியாதான்னு கேட்கறா.
அப்டீங்கறன்னு சொல்லிட்டு, சரி உட்காரு புள்ளன்னு சொல்லி, தானும் அருகில் உட்கார்றான். இங்க கொஞ்சம் சின்னவருக்கு ரொமான்ஸ் வந்த மாதிரி இருந்துச்சு மூஞ்சியில். ஆனா, முத்துசெல்விதான் கேடியாச்சே.. நினைச்சதை சாதிச்சுக்கிட்டா.

சின்னவரும் கார்த்திக் பாணியிலே மணியே மணிக்குயிலேன்னு மூக்குத்தியை குத்தி விட்டுட்டார். இதோட முடிஞ்சுது கதைன்னா.. பெரியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்னு சொல்றா.
சின்னவரும் அழைச்சுட்டு போயி, காலில் விழா வைக்க, சின்னவரின் அக்கா விஜயலட்சுமி நகர்ந்து போறாங்க. அவங்க காலை பிடிச்சுக்கிட்டு, இதுல என் தப்பு என்னம்மா இருக்குன்னு கேட்கறா. என் பேரு கெட்டுட்ட கூடாதுன்னு சின்னவருதான் என்னை கட்டிக்கறேன்னு சொன்னார்னு சொல்றா.
கூரைப்புடவை, தாலி எல்லாம் உங்க பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னுதான் வாங்கிக்கிட்டேன்னு மனசாட்சி இல்லாம சொல்றா. சின்னவருமேல ஆசைப்பட்டத்தையே மறைச்சு கதையை கொண்டு போறாங்கங்க.
இவ்வளவு ஏன், சவுந்தர்யா முத்துசெல்விகிட்ட, எனக்கும், என் மாமாவுக்கு நடக்க போற கல்யாணத்துல நீதான் எல்லா வேலையும் செய்யணும் முத்துன்னு சொன்னது கூடவா என்னதான் கிராமத்து பொண்ணா இருந்தாலும் புரியாம போயிரும்.
முத்துச்செல்வி இந்த விஷயத்துல பெரிய கேடி பொண்ணுங்க. கதையை எழுதறவங்களும் முத்துசெல்வியை வெகுளி பொண்ணா காமிக்கணும்னா கொஞ்சமும் சறுக்காம கதையை கொண்டு போகணும்ங்க..அது முக்கியம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications