கண்மணி அன்போடு.. சின்னவருக்கு கவிதை எழுதறா முத்துச்செல்வி !

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் ரொம்ப முரண்பாடா இருக்கு. ரொம்ப போரடிக்கற வழக்கமான கதையாவும் இருக்கு.

நல்ல லொக்கேஷன்,அழகான பங்களா..அவுட் ஹவுஸ்..தென்னந் தோப்பு, வயல் வெளி, நீர் நிலைன்னு எங்கும் இயற்கை நிறைந்து வசீகரிக்குது.

muthuselvi writes letter to chinnavar

ஆனா, கதை ரொம்ப சொதப்பலா இருக்கறதுனால சலிப்பு வருது. பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம்னு சொல்றாங்க... ஆனா, அவங்க நடந்துக்கறது அதிகப்பிரசங்கி தனமா இருக்கு.

சின்னவரு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதும், இதை எப்போ சொல்லுவாரு சின்னவருன்னு காத்திருந்த மாதிரி வீரையன்,அவர் பொண்ணு முத்துச்செல்வி, சிறுமி தங்கம் எல்லாமே நடந்துக்கறாங்க.

சின்னவருக்காக ஏங்கி காத்துகிட்டு ஒரு பொண்ணு அவங்க வீட்டுலே இருக்குன்னு ஊர்க்காரங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டு இருக்கு முத்துச்செல்வி குடும்பம். இருந்தாலும் முத்துசெல்விக்கு சின்னவரு மேல காதலாம்.

இதை எடுத்து குடுக்கற மாதிரி முத்துச்செல்வி தங்கச்சி சிறுமியின் கதாபாத்திரத்தை அமைச்சு இருக்காங்க. அது பேசுற பெரிய மனுஷத்தனம் இருக்கே..யப்பா!

எப்போதும் தானும், சின்னவரும் இருக்கும் படத்தை வச்சுக்கிட்டு முத்துச்செல்வி காதல் வசனம் பேசுவா. சின்னவரே உங்க மேல எனக்கு காதல் பொங்கி பொங்கி வழியுது..அம்புட்டு காதல். இதை உங்ககிட்ட எப்படியாச்சும் சொல்லிடணும் சின்னவரேன்னு புலம்ப, நம்ம தங்கம் தங்கச்சி வர்றா.

muthuselvi writes letter to chinnavar

எத்தனை நாளைக்குக்கா இப்படி தனியா புலம்பி சின்னவரு மேல வச்சிருக்கற காதலை மறைச்சுக்கிட்டு இருப்பே...ஒரு பேப்பர்ல கவிதையா எழுதி குடுத்துருக்கான்னு சொல்றா.

அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து சின்னவருக்கு கவிதை எழுதறாங்க. அக்கா கவிதை நல்லா வந்திருக்கு..சின்னவருகிட்டே குடுத்துருக்கான்னு சொல்ல முத்துச்செல்வி இப்பவேவான்னு கேட்கறா.

பின்னே..இதுக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்ப்பியா..நீ சரியான மக்குக்கான்னு சொல்லுது. பாவம் அந்த சிறுமி நல்லாத்தான் நடிச்சிருக்கு. அதிகப் பிரசங்கித் தனமா இருக்கறதுனால கடுப்பாவும் இருக்கு.

இப்படி கதை போனா கடுப்பா, சலிப்பா இருக்குமா...இருக்காதா...புரிஞ்சு சீரியலை சரி பண்ணினா நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+