Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது ரக்ஷாவைப் பார்க்க முடியாதா.. நாம் இருவர் நமக்கு இருவர் நின்னுடுச்சா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்ப இருக்க இந்த சூழ்நிலையில நம்மளோட பாதுகாப்பை நாமதான் பார்த்துக்கணும். அப்படி இருக்கும் இந்த நிலைமையில் இவ்வளவு நாளா லாக்டோன் போட்டு எல்லோரும் வீட்டில் இருந்த இந்த நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதனால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இதோடு வாழ பழகிக் கொள்ளனும்னு மக்களும் தயாராகிவிட்டனர். அந்த மாதிரிதான் இவ்வளவு நாளா சின்னத்திரை சீரியல்கள் சூட்டிங் தடைசெய்யப்பட்டிருந்தது.

இப்போ இதில் கொஞ்சம் தளர்வுகள் கொடுத்து பாதுகாப்புடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் அப்படின்னு அரசு சொல்லி இருக்கு. இந்த நேரத்தில் சில சீரியல்கள் மட்டும்தான் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். ஆனால் அதில்தான் எத்தனை எத்தனை குழப்பங்களப்பா.. முடியலை.

புது சீரியல்கள்

புது சீரியல்கள்

புது புது சீரியல்களையும் கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது. இதில் செந்தில் கதாநாயகனாகவும் ரக்ஷா, ராஷ்மி கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்கள். மேலும் முன்னணி நடிகர்களும் நடித்திருந்தார்கள்.

மாயன் டாக்டர்

மாயன் டாக்டர்

ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காரணம் செந்தில் இரட்டைவேடங்களில் நடித்திருந்தார். அதில் மாயன் ஆகவும் டாக்டராகவும் கலக்கியிருப்பார். மாயனுக்கு ஜோடியாக ரக்ஷா , டாக்டருக்கு ஜோடியாக ராஷ்மி நடித்திருப்பார்கள். அதில் மாயன் ரக்ஷா ஜோடி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்ததாக இருந்தது.

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

ஆனால் தற்போது இந்த சீரியல் முடிவடைந்து விட்டதாகவும் இதில் சீசன்2 ஆரம்பித்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கும் ,இதில் நடித்த நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ரசிகர்கள் எல்லாரும் படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது என்று சொன்னதுமே இந்த சீரியல் எப்பொழுது படப்பிடிப்பு தொடங்குவார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். அந்தளவுக்கு காய்ந்து போய்க் கிடந்தனர் எல்லோருமே.

அதிர்ச்சியில் நடிகர்கள்

அதிர்ச்சியில் நடிகர்கள்

ஆனால் திடீரென 2வது சீசன் ஆரம்பிச்சாச்சு என்று சொன்னதும் ரசிகர்கள் ஏமாந்து போய் விட்டார்கள். அதுல நடித்திருந்த ரக்ஷா சீசன் 2 ல நடிக்கவில்லையாம். இதற்கு பல காரணம் சொல்லப்படுது. ஆனால் தமிழ் சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான கலைஞர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழே தெரியாத பலரும் கூட நடிக்கிறார்கள். அவர்களால் இப்போது படப்பிடிப்புக்கு சென்னைக்கு வர முடியாததால்தான் பல சீரியல்களை நிறுத்த வேண்டியுள்ளதாம்.

ரக்ஷா இல்லையா

ரக்ஷா இல்லையா

இந்த சீரியல் நிறுத்தப்பட்டது அதில் நடித்தவங்களுக்குமே தெரியாதாம். இதை நினைத்து இரு நாயகிகளும் இப்போ ரொம்ப கவலையாட்டாங்களாம். இவங்க இருவருமே பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த லாக்டோன் ஆரம்பிச்சதும் பெங்களூருக்கு போயிட்டாங்களாம். இப்போ சீரியல் டீம்ல இருந்து அவங்க கிட்ட பேசும் போது அவர்களால் அங்கு இருந்து வர முடியாது. இ பாஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அங்கிருந்து வரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

மீண்டும் செந்தில்தான் ஹீரோ

மீண்டும் செந்தில்தான் ஹீரோ

இதனால் வேற வழி தெரியாம இந்த சீரியலை முடித்துவிட்டு பாகம்-2 ஆரம்பிச்சாச்சாம். நாம் இருவர் நமக்கு இருவர் 2 ல கதாநாயகனாக செந்தில் தான் நடிக்கிறாராம். கதாநாயகியாக சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா நடிக்கிறாராம். ஆனால் இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியவில்லையாம். இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் ரக்ஷா தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

இங்கேயே இருந்திருக்கலாம்ல

இங்கேயே இருந்திருக்கலாம்ல

ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் தான் ரொம்பவும் ஏமாந்து போயிருக்கிறார்கள். அவர்களால் இந்த சீரியல் முடிவடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம் இணையதளத்தில் கமெண்ட் போட்டு தங்களுடைய கஷ்டங்களை கூறியிருக்கிறார்கள். என்ன பண்றது எல்லோருமே சென்னையிலேயே இருந்தா தொடர்ந்திருக்கலாம்.முடியாமப் போய்ருச்சே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+