Naam Iruvar Namakku Iruvar Serial: அவள் பார்க்க.. அவன் தவிக்க.. ஜிவ்வுன்னு ரொமான்ஸ்!

பகவத் கீதை விருப்ப பாடமாக படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தம் கொடுக்கலை.. கட்டிப் பிடிக்கலை.. செல்லமா பேசிக்கலை.. வெறும் பார்வைதான்.. கண்ணோடு கண் நோக்கி.. ஆஹா.. இது செம ரொமான்ஸாவுல்ல இருக்குப்பா!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புரோமாதான். மாயனும், தேவியும் செய்யும் ரொமான்ஸைப் பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் காதல் களேபரம் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் போல.

நேருக்கு நேர் நின்று கொண்டு இவர்கள் விடும் ரொமான்ஸ் செம ரவுசாக உள்ளது. அதுவும் தேவியின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மாயன் அப்படியே சொக்கிப் போகிறான்.

ஆழப் பார்வை

ஆழப் பார்வை

மாயனின் கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே பார்க்கிறாள் தேவி. பார்வைன்னா பார்வை அப்படி ஒரு ஆழப் பார்வை.. கண் இமைக்காமல் மாயனை நெருங்கி நின்று உள்ளுக்குள் உறிஞ்சிக் கொள்வது போல பார்வை.. அப்படி ஒரு காதல் பார்வை.

சிச்சுவேஷன் சாங்

சிச்சுவேஷன் சாங்

ஏங்க ஏங்க என்று தவிக்கிறான் மாயன்.. உடனே வாயில் விரலை வைத்து.. கொஞ்ச நேரம் இரேன் என்று கூறியபடி விடாமல் பார்க்கிறாள் தேவி.. மாயனுக்கோ இருப்பு கொள்ளலை.. பின்னர் தனது செல்போனை எடுத்து ஒரே ஒரு பாட்டு போட்டுக்கிறேன் என்று கூறி போடுகிறான்.

ஜோடியா பாருங்க

ஜோடியா பாருங்க

அது மெளனமான நேரம்..சும்மாவே இங்க சொக்கி நிக்கிறா தேவி.. இதுல இந்தப் பாட்டு வேற.. செம பொருத்தம்தான்.. இன்னிக்கு சாயந்திரம் ஆறரை மணிக்கு.. போய்ப் பாருங்க.. குடும்பத்தோட பார்க்காதீங்க.. தனியாப் போய்ப் பாருங்கப்பா.. புண்ணியமாப் போகும்.. நடு ராத்திரி போட வேண்டியதை எல்லாம் சாயங்காலம் போடுறாங்களே.. என்னத்த சொல்ல.

தேவிக்கு மாயன்

தேவிக்கு மாயன்

மாயன் தேவியின் ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றி, ஏற்கனவே அவள் மனதில் இடம் பிடித்திருந்ததை விட இன்னும் ராஜ நாற்காலி போட்டு அமர்ந்து விட்டான் என்பதையே இந்த காட்சியின் ப்ரோமோ காண்பிக்கிறது. மாயனின் நடிப்புக்கவே இந்த சீரியலை பார்க்கலாம். அதோட ரொமான்ஸ் வேற கேட்கணுமா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+