Naam Iruvar Namakku Iruvar Serial: கையி பரப்பரங்குது ராத்திரி சம்பவம் செய்யலாமா டா?
சென்னை விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தேவிக்கு புது ஆசை வந்திருக்குது. ஒரு வாரத்துக்கு டானா வாழணும் என்கிற ஆசை இருக்கிறதாம்.
நீங்களோ, நானோ ஆசைப்பட்டா இது நடக்குமா?ஆனால், தேவி ஆசைப்பட்டா அது நடக்கும். ஏன்னா புருஷன் மாயனே ஒரு ரவுடிதானே.. தூக்கி கட்டிய சேலை, ஜவுரி வைத்து பின்னிய பின்னல், அதில் சரம் சரமாய் தொங்கும் மதுரை மல்லி, செக்கச் செவேல் லிப்ஸ்டிக் என்று சூப்பர் கெட்டப்பில் அசத்துகிறாள் தேவி.
பேரை மாத்தி வைன்னு சொல்லி மாயனிடம் கேட்க, தேவியின் தங்கை தாமரை எங்க ஊரில் ஒரு ரவுடி பொம்பளை இருக்காங்க. அவங்க பேரு ரவுடி ரங்கம்மா. அதே பேரே வச்சுகலாமான்னு கேட்க ஒர்க் அவுட் ஆயிருச்சு.

செக்போஸ்ட் தூக்கியாச்சு
ஓபன் காரில் ஸ்டைலாக உட்கார்ந்து மார்க்கெட்டில் எல்லாப் பொருட்களையும் தூக்கி விசிறியாச்சு. சும்மா நின்ற ஆள் ஒருத்தரின் கன்னத்தில் பொளேர்னு அடி விட்டாச்சு. சும்மா டி குடிச்சுக்கிட்டு நின்ன ஒருத்தன் வேலைக்கு போகாமல் வெட்டியா இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு அவனையும் அடிச்சு போட்டாச்சு.

வண்டியை எடுடா
வண்டியை எடுடான்னு ஜங்கு ஜங்குன்னு நடந்து காரில் ஸ்டைலா ஏறியும் உட்கார்ந்தாச்சு. போலீஸ் செக் போஸ்ட் வருதுன்னு மாயன் சொல்ல, அடிச்சு தூக்குடான்னு சொல்றா தேவி. ஐயோ வேணாம்ங்க.. போலீசுகிட்டே வம்பு வச்சுக்க வேணாம்னு மாயன் சொல்ல, அடிச்சுது தூக்குன்னு சொல்றா தேவி.அடிச்சு தூக்க, போலீஸ் துரத்திக்கிட்டு வர்றாங்க. இப்போ போடுடா பிரேக்கைன்னு சொல்றா தேவி.

துரத்தறாங்க போலீஸ்
போலீஸ் துரத்திக்கிட்டு வராங்க.. இப்போ போயி பிரேக் போட சொல்றீங்களேன்னு மாயன் பிரேக் போட, அது ஒன்னும் இல்லை போலீஸ்காரர் வண்டி பிரேக் பிடிக்கலை. பாருங்க தள்ளி வந்துதான் பிடிக்குதுன்னு சொல்றா தேவி கெத்தா உட்கார்ந்துகிட்டு. அவர் ஒரு சல்யூட் அடிச்ச்சுட்டு, நீங்க பார்த்து போங்கம்மான்னு போறார்.

சம்பவம் ராத்திரிக்கு
எல்லாத்தையும் முடிச்சுட்டுத்தான் கேட்கிறாள் தேவி, கையி பரபரன்னு இருக்குது. ராத்திரி சம்பவம் எதாவது செய்யலாமான்னு..ஆடிப் போறாங்க மாயனும், ரைட்டும்! அது மட்டும் இல்லை..ஏண்டா ஆந்திரா பக்கம் போலாமா..அங்கேதான் ரவுடின்னா வெட்டு, குத்துன்னு த்ரில்லா இருக்கும்னும் சொல்றா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications